மஞ்சளில் பல நன்மைகள் இருந்தும் இந்த நோயாளிகள் சாப்பிட்டால் ஆபத்தா… பயனுள்ள தகவல் இதோ!

Published:

சில உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை சாப்பிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. யாரெல்லாம் மஞ்சளை உண்ணக்கூடாது என்பதை இங்கு காணலாம்.

மஞ்சள் நமது சமையலறையில் தவிர்க்கவே முடியாத மசாலா பொருளாகும். மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக பல சுகாதார நிபுணர்கள் இதை தொடர்ந்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆனால் இது அனைவருக்கும் நன்மையாக அமைவதில்லை. எனவே சில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் மஞ்சள் அதிகம் சேர்க்கக்கூடாது.

அதில் முதலில் இருப்பது நீரிழிவு நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் சர்க்கரை நோயாளிகள் மஞ்சளை அதிகமாக உட்கொண்டால் அவர்களின் உடலில் ரத்தத்தின் அளவு கணிசமாக குறையும். இது உடலுக்கு நல்லதல்ல எனவே குறைவான மஞ்சள் உணவில் சேர்ப்பது நல்லது.

அடுத்தது மஞ்சள் காமாலை நோய் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மஞ்சள் உண்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிகளவில் மஞ்சள் சாப்பிட விரும்பினால் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. இல்லை என்றால் உங்கள் உடல்நிலை மோசம் அடைய வாய்ப்புள்ளது.

ஸ்கூல் முடிந்து சோர்வாக வரும் குழந்தைக்கு ஈவினிங் ஸ்நாக்சாக வாழை பழ தோசை!

மூன்றாவதாக சிறுநீரக கல். இந்த நோய் மிகவும் மோசமான நோய். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் அதிக வலியை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் மஞ்சள் உட்கொள்வதை குறைக்க வேண்டும். மஞ்சள் அதிகம் சேர்க்கும் போது பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் உங்களுக்காக...