தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்!

நவம்பர் 14 அன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் குறித்து தற்போது பார்ப்போம் கமல்ஹாசன்: களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகி முதல்…


71a32fcb73d847db78f77751eacc77b0

நவம்பர் 14 அன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

கமல்ஹாசன்: களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகி முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்று இன்று உலக நாயகனாக வலம் வருகிறார்

ஸ்ரீதேவி: கந்தன் கருணை என்ற படத்தில் முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் பின்னாளில் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆனார்;.

குட்டி பத்மினி: அபலை அஞ்சுகம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாக புகழ் பெற்றார்

மீனா: நெஞ்சங்கள் என்ற படத்தில் சிவாஜியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ரஜினி உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார்

பேபி ஷாலினி: ஓசை என்ற தமிழ்ப்படத்தில் நடித்து அதன்பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாளில் கதாநாயகியாகி அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்தார். தற்போது அஜித்தின் மனைவியாக உள்ளார்.

ஷாமிலி: ராஜநடை படத்தில் அறிமுகமாகி அஞ்சலி படம் மூலம் புகழ் பெற்ற இவர் ஷாலினியின் தங்கை ஆவார்

இதேபோல் பல குழந்தை நட்சத்திரங்கள் பின்னாளில் பெரிய நடிகர், நடிகையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன