குழந்தைகள் வருங்கால தூண்கள்

By Staff

Published:

a3ea0b43347e89134804415e630f71b7

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி அதாவது இன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே வருங்கால தூண்கள். அவர்கள் தான் நாளைய விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள். குழந்தைகள் நம்மிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர். எனவே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அன்பையும், பண்பையும் நாம் தான் அக்கறையுடன் கற்றுத்தர வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளை ஆண், பெண் பாகுபாடின்றி சமமாக வளர்க்க வேண்டும். இதன் மூலம் எதிர்கால சமுதாயத்தில் பாலின பாகுபாடுகள் குறையும். எனவே குழந்தைகளை மன ஆரோக்கியமாகவும், உடல் ஆரோக்கியமாவும் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை

குழந்தைகள் தான் நாட்டின் வருங்கால தூண்கள் என்பதை முன்னாள் பிரதமர் நேரு உள்ளார்ந்து உணர்ந்திருந்ததால் தான் அவர் குழந்தைககள் மீது அதீத பாசம் காட்டினார். எப்போதும் அவரை சுற்றி குழந்தைகள் இருந்து கொண்டே இருப்பார்கள்

குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்போடு அழைப்பதால்தான் ஒவ்வொரு ஆண்டும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களை விட இந்த நாட்கள் குழந்தைகளுக்கு ரொம்பவே சிறப்பான நாள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். அதேபோல் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வாழ்த்து கிடைக்கும். இந்த தினத்தில் மட்டும் குழந்தைகள் செய்யும் சிறிய, சிறிய தவறுகளுக்கு தண்டனை இருக்காது. இந்த நாள் எல்லா குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான நாள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை

Leave a Comment