இறப்பிற்குப் பிறகு மனிதன் என்னவாகிறான்? அறிவியல் ஆராய்ச்சி முடிவைப் பாருங்க..!

மனித வாழ்க்கை என்பதே ஒரு புரியாத புதிர்தான். மனிதன் இறந்தபிறகு என்னாகும் என்பதற்கு இன்று வரை பல அனுமானங்களை வைத்திருந்தாலும் உறுதியாக நிரூபித்தது எதுவுமில்லை. அப்படி ஒரு புதிய தியரியை விஞ்ஞானி ஒருவர் முன்வைத்துள்ளார்.…

மனித வாழ்க்கை என்பதே ஒரு புரியாத புதிர்தான். மனிதன் இறந்தபிறகு என்னாகும் என்பதற்கு இன்று வரை பல அனுமானங்களை வைத்திருந்தாலும் உறுதியாக நிரூபித்தது எதுவுமில்லை. அப்படி ஒரு புதிய தியரியை விஞ்ஞானி ஒருவர் முன்வைத்துள்ளார். மரணம் என்பது ஒரு முடிவு இல்லை. அது மனிதனின் மாயை. அமெரிக்க மருத்துவரும் விஞ்ஞானியுமான ராபர்ட் லான்ஸா மற்றும் இவரது புத்தகமான பயோசென்டிசம் இறப்பு ஒரு முடிவில்லாத எண்ணிக்கையில்லாத பிரபஞ்சங்களுக்கு ஒரு கதவாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

ராபர்ட் லான்ஸா ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் குவாண்டம் மெக்கானிக்ஸ், வானிய அறிவியல் துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வருகிறார். இதன் விளைவாகத்தான் பயோசென்டிரிசம் என்ற கோட்பாட்டைக் கொண்டு வந்தார்.

அனைத்து உடல் சாத்தியக்கூறுகளிலும் விளையும் வகையான ஒரு பொறிமுறை தான் வாழ்க்கை சுழற்சி. மனிதனைப் படைத்தது பிரபஞ்சம் அல்ல. நமக்குத் தெரிந்தபடி பிரபஞ்சத்தை அமைத்தது நாம் தான் என்ற தியரியை அடிப்படையாக வைத்துள்ளார். எப்படி மொழிக்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமோ அதே போலத்தான் வாழ்க்கை சுழற்சிக்கு இடம் மற்றும் நேரம் கருவிகளாக இருக்கிறது.

சொல்லப்போனால் நம் மூளைதான் இரவு என்ற மாயையை உண்மை என்று நம்புகிறது. ஆனால் மரணம் என்பது பிரபஞ்சம் என்னும் ஸ்க்ரீனிங் தளத்தில் ஒரு சீரிஸைப் பார்த்து முடிப்பது போலத்தான். பிரபஞ்சத்தின் வெவ்வேறு கதைகள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு முடிவுகளை நீங்கள் அணுக வேண்டி அவை அனைத்தின் முடிவிலும் இறுதியாக நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள். வாழ்க்கை சுழற்சியும் அப்படித்தான் நடக்கிறது என்கிறார்.

வாழ்க்கை மாறினாலும் உயிரின் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவரைப் பொருத்தவரை இயற்பியல் விதிகளின்படி ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. அது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிறது. நாம் இறக்கும்போது நேரங்கள் முடிகிறது. ஆனால் அதே நேரத்தில் வேறொரு இடத்தில் வேறு உருவத்திற்கு மாறி விடுகிறது. புதிய ஒரு இணைப்பு உருவாவதால் மரணம் என்பது நிகழ்வதில்லை என்கிறார்.

ஆனால் இந்த அறிவியல் ஆய்வு சொன்னதை நம் முன்னோர்கள் முன்னாடியே சொல்லிட்டாங்க. மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர நம் உயிருக்குக் கிடையாது. அது இன்னும் ஒரு பரிணாமம் அடைகிறது. அதாவது நம் ஆன்மா இன்னொரு உடலுக்குள் சென்று புதுப்பிறவி எடுக்கிறது.