வெற்றி வெற்றி வெற்றி…. அதுக்கு என்னதான் வழி? இதெல்லாம் உங்கக்கிட்ட இருந்தா போதும்..!

‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி…

success

‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில் வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவான பாயிண்டுகளால் சுட்டிக் காட்ட வேண்டும்.

அப்போது தான் அதை ஏற்றுக் கொள்வார்கள். பட்டும் படாமலும் சொன்னால் எவனுக்கோ சொல்கிறார்கள் என்று கடந்து போய்விடுவார்கள். இனி வெற்றி பெற அந்த முத்தான பத்து சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா…

நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நமது குறி தப்பக்கூடாது. அதற்கு குறி தெளிவாகவும், மாற்றம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்க முடியும்.

அடுத்ததாக நாம் எல்லோருக்கும் மிக மிக அவசியம் கடின உழைப்பு. இது தான் வாழ்வில் நம்மை அடுத்தடுத்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும். எவ்வளவு தடைகள் வந்தாலும் நம் மனதைத் தளராமல் உழைக்கச் செய்யும்.

அடுத்து நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்றால் நாம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகப் பாடங்களை அல்ல. அனுபவப் பாடங்களை. அதே போல தன்னம்பிக்கை இருந்தால் தான் நாம் எக்கணத்திலும் வெற்றி வாகை சூட முடியும்.

secret of success
secret of success

பிறரை நம்புவதை விட தன்னையும், தன் பலத்தையும், தன்னோட பிளஸ் பாயிண்டையும், தன்னோட அறிவையும் நம்ப வேண்டும். அதன்பிறகு தான் செயலில் இறங்க வேண்டும். அடுத்தவரை நம்பி ஒருபோதும் அசால்டாக இறங்கி விடாதீர்.

அடுத்து தன்னம்பிக்கை, பொறுமை, நல்ல உறவுகள் மிக மிக அவசியம். எல்லாற்றிற்கும் மேலாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்போதும் பாசிடிவ்வாக நினையுங்கள். அதாவது நேர்மறைச் சிந்தனை இருக்க வேண்டும். அப்புறம் நல்ல உறவுகள், உடல் நலம் நமக்கு மிக மிக அவசியம். அதே போல காலத்தை சரியாகக் கடைபிடியுங்கள். நேர மேலாண்மை என்பதைத் தெரிந்து கொண்டால் தான் உங்களுடைய செயல்கள் சிறப்பாக இருக்கும்.

பிரதிபலன் கருதாமல் எவன் ஒருவர் உழைக்கிறானோ அவன் வாழ்வில் சீக்கிரம் முன்னுக்கு வருவான். அது தான் தன்னலமற்ற பணியும் நமக்குக் கற்றுத் தருகிறது. பூட்டுன்னு இருந்தா சாவி இல்லாமலா இருக்கும்? அப்படித்தான் பிரச்சனைகளும். நமக்குத் தான் பிரச்சனைன்னு நினைக்காதீங்க. எல்லாருக்கும் அவரவர்க்கு ஏற்ப அது மாறுபடும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. அதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் தான் வெற்றி உள்ளது.