சர்க்கரை நோயாளிக்கு சப்பாத்தி வேண்டாம் புதுசா கோதுமை இடியாப்பம் செய்யலாம்!

Published:

சர்க்கரை நோயாளிகள் பொதுவாக காலை மாலை நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம் , அதற்கு பதிலாக புதுசா கோதுமை இடியாப்பம் செய்யலாம். ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்

தண்ணீர் – 3/4 கப்

உப்பு – 1 சிட்டிகை
நெய் – சிறிதளவு

கோதுமை மாவு தயாரிக்கும் முறை:

வாணலியில் கோதுமை மாவினை போட்டு இளம் சூட்டில் வறுக்க வேண்டும். அந்த மாவை சலித்து, காற்று புகாதவாறு பாத்திரத்தில் சேமித்துக் கொள்ளவும். இந்த மாவை இடியாப்பம் மற்றும் இனிப்புக் கொழுக்கட்டை செய்யலாம்.

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

இடியாப்பம் செய்முறை :

ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு மாவுடன் எடுத்து கொண்டு உப்பு போட்டு கலக்கவும். அதில் வெந்நீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும். கையில் ஒட்டக் கூடாது.

இந்த நேரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து பிடைந்தால் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.

அந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து, இட்லி தட்டில் பிழியவும். பிறகு அந்தத் தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 8 முதல் 10 நிமிடம் வரை வேக வைத்து கொள்ளவும் .

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

இப்போது சுவையான சத்தான கோதுமை இடியாப்பம் ரெடி.

சாப்பிடும் பொழுது நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகப் பிசைந்து சாப்பிடவும்.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment