உடல் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுரைக்காய் தயிர் குழம்பு!

Published:

சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் குழந்தைகள் முதல் வபெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இந்த நீர் சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தயிர் – 1 கப்
வத்தல் – 2
கறிவேப்பிலை – கையளவு
கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய் – சிறிதளவு
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 5 பற்கள்
சீரகம் – 1 டீஸ்புன்
மிளகு – 1/2 டீஸ்புன்

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

செய்முறை :

சுரைக்காய் , பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி ,பூண்டு,மிளகு ,சீரகம் அனைத்தையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.

அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். அடித்த தயிருடன் பொடித்து வைத்த பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும் .

அடுத்து தயிருடன் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்கவும். இப்போது சத்தான சுரைக்காய் தயிர் குழம்பு ரெடி.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment