திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்து களி ரெசிபி இதோ..

Published:

கருப்பு உளுந்து களி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருளாகும். எலும்புகள் நல்ல வளர்ச்சி பெறவும், நல்ல ஆரோக்கியமாகா இருக்கவும் உளுத்தங்களி சாப்பிடுவது நல்லது.இதை பெரியவர்கள் முதல் சியவர்கள் வரை வாரத்திற்கு 3 நாள் களி சாப்பிடலாம் எலும்புகள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும். இதை திருநெல்வேலி ஸ்டைலில் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு மாவு – ஆறு கப்

கருப்பட்டி அல்லது வெல்லம் – 500 கிராம்

தேங்காய் துருவியது – 1 கப்

நல்லெண்ணெய் – நான்கு தேக்கரண்டி

அரிசிமாவு – 1 கப்

ஏலக்காய் – 5, 6 பொடியாக்கியது

நெய் – சிறிதளவு

செய்முறை : –

முதலில் உளுந்தமாவை ஒரு கடாயில் நன்கு நெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவை நன்றாக கட்டி சேராமல் கரைத்து கொள்ளவும், பின் அதை கொதிக்க வைத்து, அதனுடன் நெய்யில் வறுத்த உளுந்த மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்து வரவும்.அதில் அடியில் ஒட்டாமல் இருக்க நல்லெண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும்.

சிறிது நேரம் கழித்து அது கட்டியாக மாறும். அது நல்ல பதத்திற்கு வரும் வரை விடாமல் கிண்டவும். பின்னர், அதனுடன் ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.

கார்த்திகை மாத ஸ்பெஷல் – தித்திக்கும் பாயசம்! ரெசிபி இதோ..

தேங்காய் துருவலை நெய்யில் சேர்த்து வதக்கி பயன்படுத்தினால் சுவை மேலும் சிறப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment