கார்த்திகை மாத ஸ்பெஷல் – தித்திக்கும் பாயசம்!

Published:

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது என்றாலே கடவுள் வழிபாட்டிற்கு பல விதமான பிரசாதங்கள் செய்வதுண்டு அந்த வகையில் அரிசி,தேங்காய் வைத்து சுவையான சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான நாவில் எச்சில் ஊற வைக்கும் பாயசம் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – ஒரு தேக்கரண்டி ,

வெல்லம் – அரை கப்,

தேங்காய் துருவல் – ஒரு கப்,

ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி,

முந்திரிப்பருப்பு – 15,

நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் குறைந்தது அரிசியை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவலை சேர்த்து மையாக அரைத்திடுங்கள்.

பிறகு வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி வடிகட்டிக் எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய வெல்லப் பாகில் அரைத்து வைத்துள்ள அரிசி-தேங்காய் துருவல் மாவைச் சேர்க்கவும். இதனை 5 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும்.

எவ்வளவு செஞ்சாலும் உடனே காலியாகும் நெல்லிக்காய் துவையல்!

பிறகு அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து அதை பாயாசத்தில் சேர்க்கவும். அவ்வளவுதான் தித்திக்கும், சுவையான அரிசி – தேங்காய் பாயசம் ரெடி.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment