கருவாட்டு குழம்பு சாப்பிட முடியாத நேரத்தில் அதே சுவையில் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு வச்சி பாருங்க …. நாக்குலே சுவை இருக்கும் .
இதில் பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் சேர்ப்பதால் வாய்வுத் தொல்லை, அஜீரண கோளாறு குறைக்கும் குணமுடையது.
செய்யத்தேவையான பொருட்கள்:
தட்டை பயறு-1/2 கப்
கத்திரிக்காய் – 3
தக்காளி-1
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்-10
உப்பு- தேவையான அளவு
புளி சாறு- சிறிய எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்
சாம்பார் மிளகாய் போடி-2 தேக்கரண்டி
(மசாலா அரைத்தும் செய்யலாம் குழம்பு அதிக கனிசமான அளவு கிடைக்கும்-குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
நல்ல எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு-1/2
சீரகம்-1/4
கறிவேப்பிலை
செய்முறை:
தட்டை பயறு வாணலியில் சிறிது வறுத்து பின் வேகவைத்துக்கொள்ளவும். குழைவாக இல்லாமல் பக்குவமாக வேக வைக்கவும்.
வெந்தத பயிறுடன் , உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
3 நிமிடம் கொதித்ததும் தாளிதம் செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தாளித்த கத்தரிக்காய் உடன் குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
காய்கறி சுருக்கமாக இருக்கும் நேரத்தில் சுவையான குழம்பு வகை செய்ய எண்ணினால் இதை செய்யலாம்.
முடி உதிர்வு , வெள்ளை முடி பிரச்சனையா? புதுசா நெல்லிக்காய் சாதம் ட்ரை பண்ணுக….
அதிக சிரமம் தேவையில்லை, சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.