மிதுனம் புத்தாண்டு ராசி பலன் 2023!

Published:

சனிப் பெயர்ச்சியால் கடந்தகாலங்களில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களில் இருந்து ஓரளவு மீண்டு நேர்மறையான விஷயங்கள் நடக்கப் பெறும் ஆண்டாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை அதிக அளவில் விரயச் செலவு செய்து இருப்பீர்கள். தற்போது மருந்து, மாத்திரை இல்லாத சிறப்பான உடல் நலத்துடன் வாழ்வீர்கள்.

பொருளாதாரம் என்று பார்க்கையில் பல அவமானங்களைக் கொடுத்த கடன் சுமையில் இருந்து வெளிவருவீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையில் நிம்மதி, புது வேலைக்கு முயற்சிப்போருக்கு புது வேலை என ஓரளவு சிறப்பான ஆண்டாக இருக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக தள்ளிப் போன திருமணம் தற்போது நடந்தேறும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை விவாகரத்து, மறுமணம் என நீங்கள் நினைத்த விஷயங்கள் நடந்தேறும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வீர்கள்; இதனால் சுப விரயச் செலவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் குறித்த நற் செய்தி கிடைக்கும். பழைய வீட்டினைப் புதுப்பித்தல், புது வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்தல் என்பது போன்ற விஷயங்கள் மனநிறைவினைக் கொடுக்கும்.

உறவுகளுக்குள் விரிசல், நண்பர்களுக்குள் பிரச்சினை, கணவன்- மனைவி உறவில் பிரிவு என 2022 ஆம் ஆண்டு கசப்பான ஆண்டாக இருந்திருக்கும். 2023 ஆம் ஆண்டு பிரிந்த உறவுகள் அனைத்தும் சேரும் ஆண்டாக இருக்கும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மிகவும் தைரியத்துடன் செயல்பட்டு தங்களின் லட்சியத்தை அடைய முயற்சிப்பார்கள். இல்லத்தரசிகள் குடும்பப் பிரச்சினையில் இருந்து மீண்டு மன நிம்மதியுடன் காணப்படுவர்.

மேலும் உங்களுக்காக...