முடி உதிர்வு , வெள்ளை முடி பிரச்சனையா? புதுசா நெல்லிக்காய் சாதம் ட்ரை பண்ணுக….

முடி சம்பந்தபட்ட பிரச்னைக்கு நெல்லிக்காய் ஒரு தீர்வாக அமையும். அதை தினமும் நாம் சாப்ப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க தொடங்குகிறது. நெல்லிக்காயை சாதம், ஊறுகாய், ஜூஸ் என பல வழிகளில் நாம் சாப்பிடலாம். இப்போது நெல்லிக்காய் சாதம் எப்படி செய்யலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – 2 கப்

பெரிய‌ நெல்லிக்காய் – 10

காய்ந்த மிளகாய் – 4

கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி

வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி

இஞ்சி – ஒரு தேக்கரண்டி

கடுகு – ஒரு டீ ஸ்பூன்

சீரகம் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

பெருங்காயம் – கால் தேக்கரண்டி

எண்ணெய் – தேவியான அளவு

கறிவேப்பிலை – 4 அல்லது 5 இலைகள்

செய்முறை:

முதலில் நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அதை நன்கு துடைத்து அதன் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து அடுத்து சீரகம், உளுத்த‌ம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை , வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

இதில் மாறாக துருவிய நெல்லிக்காயை அப்படியே சேர்க்கலாம்.

வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறி தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.அடுப்பு தீயை மிதமாக்கி இரண்டு நிமிடம் முடி வைக்கவும் .

கேரளா ஸ்பெஷல் இஞ்சி தேங்காய் சாதம் சாப்பிட்டு பாருங்க… வாயில் எச்சில் ஊரும் சுவை!

இப்போது சுவையான நெல்லிக்காய் சாதம் தயார். சத்தான இந்த சாதத்தை சாப்பிடுவதன் மூலம் முடி கருமையாக அடர்த்தியாக வளரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.