ரவை மட்டும் போதும்… சுவையான பால் கொழுக்கட்டை ரெசிபி!

Published:

அரிசி மாவு இல்லாமல் ரவை வைத்து புதுமையான பால் கொழுக்கட்டை செய்து சாப்பிடலாமா..

தேவையான பொருட்கள்:

ரவை – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்தூள் – சிட்டிகை
முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை – 100 கிராம்
பால் – ஒரு லிட்டர்
நெய்- ஒரு தேக்கரண்டி

செய்முறை

பாலை தண்ணீர் ஊற்றால் காய்ச்சிக் கொள்ளவும். ரவையின் மீது பாலை ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் தண்ணீர் ஊற்றாமல், மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை, சிறு சிறு சீடை களாக உருட்டி, நிழலில் காயவைக்கவும்.

பாலை , ஒரு பாதியில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைத்து கொள்ளவும் , உருட்டிய ரவை உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.

பேக்கரியில் வாங்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி நம்ம வீட்டுலையும்! ரெசிபி இதோ !

உருண்டை வெந்து விட்டால் , மிதந்து மேலே வரும். உருண்டைகள் முழுமையாக வெந்தபின், மீதியுள்ள பாலையும் சேர்த்துப் பொங்கவிடவும். பால் பொங்கியதும், அதில் ஏலக்காய்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்துப் பரிமாறவும்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment