பேக்கரியில் வாங்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி நம்ம வீட்டுலையும்! ரெசிபி இதோ !

கடைகளில் கிடைப்பது போல உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டிலேயே தரமான உருளைக்கிழங்கு வைத்து செய்யலாம் வாங்க …

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய ஒரு பெரிய உருளைக்கிழங்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதை மெல்லியதாக ஸலைஸ் செய்து கொள்ளவும்.

இந்த நறுக்கிய உருளைக்கிழங்களை இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசி கொள்ளவும். பிறகு அதை உப்பு போட்டு 15 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும் . உருளைக்கிழங்கில் உப்பு பிடிக்க வேண்டும் .

பின்பு உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு சுத்தமான துணியில் போட்டு ஈரப்பத்தை பிரித்தெடுக்க வேண்டும், பின்பு ஈரப்பதம் இல்லாமல் காற்றில் உலர்த்த வேண்டும்.

கேரள ஸ்டைல் ஸ்பெஷல் பச்சரிசி நெய்யப்பம் வீட்டிலேயே பண்ண முடியுமா!

பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிய விட வேண்டும்.

பின்பு அதனுடன் காரமாக இருக்க மிளகாய் பொடி அல்லது மிளகு பொடி கலந்து குலுக்கினாள் சுவை அருமையாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.