உடல் சோர்வு என்பது அனைவருக்கும் இயல்பான ஒன்று. நாம் அதிகமாக வேலை செய்யும் போது நமது உடல் அதிகமாக சோர்வு அடைகிறது. அதனை சரி செய்ய முளைக்கட்டிய பயறுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதை வைத்து சுவையான புலாவ் செய்யலாமா..
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பச்சை பயறு – 1/2 கப்
முளைக்கட்டிய தட்டைப் பயறு – 1/2 கப்
கைக்குத்தல் அரிசி – 2 கப்
குடைமிளகாய் – 1
தக்காளி – 2
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மழைக்கு சுடசுட குழந்தைகளுக்கு பிடித்தமான சாம்பார் இட்லி செய்து குடுங்க!
செய்முறை :
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, அதில் வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும் . பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
பின்பு குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின்பு தக்காளி, மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
சுகர் இருக்குதா.. வாய்க்கு ருசியான பாகற்காய் தொக்கு! ரெசிபி இதோ..
அடுத்து முளைக்கட்டிய பச்சை பயறு மற்றும் தட்டைப் பயறை சேர்த்து 5 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள கைக்குத்தல் அரிசியை சேர்த்து, உப்பு மற்றும் கொத்தமல்லி புதினாவை தூவி, 2-3 நிமிடம் பிரட்டி இறக்கவும் ஆரோக்கியமான முளைக்கட்டிய பயறு புலாவ் ரெடி.