நொடியில் தயாராகும் கோவைக்காய் சாதம்! ரெசிபி இதோ!

By Velmurugan

Published:

வித்தியாசமான மற்றும் சத்தான கோவைக்காய் சாதம் செய்வதற்கான செய்முறை விளக்கம் இதோ!

தேவையான பொருட்கள்:-

சாதம் – 1 கிண்ணம் (உதிரியானது )
கோவைக்காய் – 10 முதல் 15 வரை கழுவி கொள்ளவும்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்றவாறு

வறுத்து பொடித்து கொள்ள வேண்டிய பொருட்கள் …

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கெட்டி பெருங்காயம் – ஒரு சிறு மிளகு அளவு (தூளாக இருந்தால் – சிறிதளவு )
வெள்ளை எள் – 1 தேக்கரண்டி

தாளிக்க:-

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 முதல் 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – சிறிது
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

நடுரோட்டில் தனியாக விடாமுயற்சியுடன் நடந்து செல்லும் குஸ்பு! வைரல் வீடியோ!

செய்முறை:-

1) கோவைக்காயை நன்றாகக் கழுவி விட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2) தோசைக்கல் அல்லது அகலமான தாவாவை அடுப்பிலேற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள காயை, தனித்தனியாக பரப்பி வைக்கவும்.

3) அதன் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணையை விட்டு, அவ்வப்பொழுது திருப்பி விட்டு சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் அவனிலும் வதக்கி எடுக்கலாம்).

4) வெறும் வாணலியில் வெள்ளை எள்ளைப் போட்டு சிவக்கும் வரை அல்லது பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

5) அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு அதில் பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப்போட்டு சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும்.

6) ஆறியதும், அத்துடன் வறுத்து வைத்துள்ள எள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

7) ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும்.

8)பின் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.

9) கறிவேப்பிலையையும் போட்டு சற்று வறுத்து, அதன் பின் வதக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும்.

10) பின்னர் அதில் சாதத்தைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும்.

நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளியாக நாளை அறிக்கை!

Leave a Comment