கேரளா உணவில் பல தனி சுவை இருக்கும், இயற்கை மாறாமல் சத்துக்களும் நிறைந்து இருக்கும். ஒரு முறை சாப்பிட்டால் வேண்டும் வேண்டும் என ஆசை வரும் பக்குவத்தில் அவரது சமையல் அமையும்.
அந்த வகையில் கேரளா ஸ்பெஷலான கமகமக்கும் இஞ்சி தேங்காய் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்..
அரிசி – 2 கப்
இஞ்சி – 100கிராம்
பூண்டு – 100 கிராம்
தேங்காய் பால் – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
புதினா – 6 இலைகள்
நெய் – 2 தேக்கரன்சி
உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை..
*முதலில் அரிசியை அரை மணி நேரத்திற்கு முன்னதாக நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து கடாயில் நெய் சேர்த்து இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
* அதில் அரிசி, தேங்காய் பால், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி வேண்டும்,
* நாம் எடுத்து கொண்ட அரிசியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
* நன்கு கொதிக்க விட வேண்டும்.
*பின்பு அதில் புதினா இலைகளை சேர்த்து கிளறி கொள்ளவும் , தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கவும் .
ஆன்லைன் ஆர்டரில் கலக்கிய பிரியாணி: ஒரு நிமிடத்திற்கு இத்தனையா?
* அதில் தண்ணீர் முழுவதும் வற்றி சரியான பக்குவத்தில் வந்ததும் சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் தயார். இதை மட்டம் , சிக்கன் குழம்புக்கு , முட்டை தொக்குக்கு சேர்த்து சாப்பிடலாம் , சைவ பிரியர்களாக இருந்தால் உருளை கிழங்கு பொறித்து சாப்பிட்டால் சுவை பலமாக இருக்கும்.