ஆன்லைன் ஆர்டரில் கலக்கிய பிரியாணி: ஒரு நிமிடத்திற்கு இத்தனையா?

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் ஸ்மார்ட்போன்களில் உணவு ஆர்டர் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3,330 ஜொமேட்டொவில் ஆர்டர் செய்து அசத்தி உள்ளார் டெல்லியை சேர்ந்த அங்கூர்.

இந்நிலையில் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அங்கூர் என்பவர் நாளோன்றுக்கு 9 ஜொமேட்டோஆர்டர் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதே போல் இவருடைய ஆர்வத்தை பாராட்டும் விதமாக சிறந்த உணவுப் பிரியர் என்ற கிரீடம் கொடுக்க இருப்பதாக அந்நிறுவனம் கூறி உள்ளது. இதனை தொடர்ந்து அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணி முதல் இடத்தை பெற்றுள்ளதாகவும், ஒரு நிமிடத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 186 ஆர்டர் செய்வதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பீட்சா பிரியர்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 139 ஆர்டர்கள் டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், ஸ்விக்கி நிறுவனத்தில் தந்தூரி சிக்கன், பட்டர் நான், வெஜ் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா மற்றும் சிக்கன் ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகள் ஆர்டர் பிரியர்களை கவர்ந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.