நடிப்பில் மிரட்டிய கோவை சரளா, ஆனால்.. செம்பி திரை விமர்சனம்

Published:

பிரபுசாலமன் இயக்கத்தில் கோவைசரளா, அஸ்வின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் செம்பி. இந்த படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்ப்போம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பேத்தியுடன் கோவை சரளா சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் போது பயணிகளில் ஒருவராக அஸ்வின் உள்ள நிலையில் திடீரென கோவை சரளாவுக்கு ஏற்படும் பிரச்சனை அந்த பிரச்சனைக்கு காப்பாற்ற முன்வர அஸ்வின் அதனை அடுத்து நடக்கும் விறுவிறுப்பான காட்சிகள் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து படம் எடுப்பவர் பிரபுசாலமன் என்பதும் இந்த படத்தில் கிட்டத்தட்ட பல காட்சிகள் பேருந்திலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை சரளா நடிப்பில் அசத்தி உள்ளார் என்பதும் அவர்தான் இந்த படத்தின் தூணாக இருந்து மொத்த படத்தையும் தாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அஸ்வினும் தனது கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் என்பதும் அவரது நடிப்பும் ஓரளவு பரவாயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி ராமைய்யா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஆக நடித்து இருப்பவர்கள் அனைவரது நடிப்பும் சூப்பர். கதை சற்று ஆழமாக இருந்தாலும் கேரக்டர்கள் வடிவமைப்பு மற்றும் கதையை நகர்த்திச் செல்லும் விதம் சுமாராக உள்ளது.

கோவை சரளாவின் நடிப்பு மட்டுமே படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதால் தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது ஒரு ஏமாற்றம் தெரிகிறது. சமூக கருத்துக்கள் என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்கும் திரைக்கதைதான் இந்த படத்திலும் உள்ளது. இருப்பினும் கோவை சரளாவின் மாறுபட்ட நடிப்பிற்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

மேலும் உங்களுக்காக...