டயட் இருப்பவர்களா.. கொள்ளு ரசம் ட்ரை பண்ணி பாருங்க..

Published:

கொள்ளு இரு வகை பயிர் வகையாகும், அதில் மாவு சத்து அதிகமாக உள்ளது, முன்னாளில் இது குதிரை தீவனமாக பயன் படுத்தப்பட்டது. தற்போழுது உடல் எடை குறைக்க அதிகமாக அதிகம் ஆக பயன் படுகிறது.

கொள்ளு பருப்பை இரவில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வந்தால் எடை குறைக்க அதிகமாக உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

கொள்ளு – அரை கப்,

புளி – 50 கிராம்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

மல்லி – ஒரு தேக்கரண்டி ,

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி ,

தக்காளி – 2,

பூண்டு – 3 பல்,

பச்சை மிளகாய் – 2,

உப்பு – தேவையான அளவு.

பெருங்காயம் – அரை டீஸ்புன்

தாளிக்க தேவையான அளவு எண்ணெய் – 3 டீஸ்பூன்,

கடுகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி ,

காய்ந்த மிளகாய் – 1.

கருவேப்பிலை , மல்லி தலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் கொள்ளை 12 மணி நேரம் ஊறவைத்து கழுவி தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

ரசப்பொடிக்கு தேவையான மிளகு, சீரகம், மல்லியை நன்கு பொடித்துக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்து கட்டியாக கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் , உப்பு சேர்த்து வைக்கவும். அதில் பெருங்காயப்பொடி சேர்த்து கொள்ளவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டிபன் – 5 நிமிடத்தில் முறுமுறு சோள தோசை!

கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளித்து கொள்ளவும் , தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும் . இந்த ராசாத்தி கொதிக்க விட வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்கினால் ரசம் மேலும் வாசமாக இருக்கும்.

பலன்கள்:

குழந்தைகளுக்கு கோடையிலும் சளித் தொல்லை பிரச்சனையா இந்த ரசத்தை அருந்தினால் சிறந்த வீடு மருந்தாக இருக்கும்.

மேலும் உங்களுக்காக...