சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டிபன் – 5 நிமிடத்தில் முறுமுறு சோள தோசை!

நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம் அதிகம் நிறைந்தது தான் வெள்ளை சோளம்.

சிறு தானியத்தில் ஒன்றான வெள்ளை சோளத்தை அரிசிக்கு பதிலாக பயன்படுத்தி புது விதமான தோசை செய்யலாம். அது மிகவும் ஆரோக்கியமானது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த சுவையான சோள தோசை 5 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என ரெசிபி இதோ..

தேவையானப் பொருட்கள் :

வெள்ளை சோளம் – 1 கப்

இட்லி அரிசி – 1 கப்

உளுந்து – அரை கப்

வெந்தயம் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1

சீரகம் – 1 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும், அடுத்து சோளத்தை தனியாக ஊற வைக்க வேண்டும்.

பின்பு 6 மணி நேரம் நன்கு ஊறியதும் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயக் கலவையை இட்லி மாவு பதத்திற்கு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

எம்மாடியோ! ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,575-க்கு விற்பனை..!!!

பிறகு, சோளம் ஊறியதும் நன்கு கழுவி நீர் விடாமல் அரைத்து கொள்ளவும். பின்பு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

அதை முன்னதாக அரைத்த உளுந்த மாவோடு சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

பின்பு, அடுப்பில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தோசை மாவுப் பதத்திற்கு மாவை கரைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டால் சுவையான தோசை ரெடி.

குறிப்பு :

வெந்ததும் எடுத்தால் மெல்லிதாக சுவையான சோள தோசை தயார். இந்த தோசையை நெய் சேர்த்து சமைத்தால் சுவை பலமாக இருக்கும். தோசைக்கு மேலே வெங்காயத்தை லேசாக தூவினால் சுவை சிறப்பாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews