பயணங்களுக்கு ஏற்றவாறு இட்லியை ரெடி செய்வது எப்படி? இதோ!

Published:

பயணங்களில் போது நாம் வீட்டில் இருந்தே இட்லியை ரெடி செய்து கொண்டு செல்வோம், அதை எந்த முறையில் ரெடி செய்வது என இந்த தொகுப்பில் காணலாம்..

தேவையான பொருட்கள்

இட்லி – 5
இட்லி மிளகாய்ப் பொடி – 4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

செய்முறை..

முதலில் இட்லி செய்து நன்றாக ஆறவிடவும். இட்லி மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கவும். இதில் இட்லியைப் போட்டு, இட்லி முழுவதும் படும்படி புரட்டி எடுக்கவும் . மிளகாய்ப் பொடியில் ஊறிய இட்லி, சுவையில் மாஸாக சாப்பிடும் இடமே மணக்கும்.

கல்யாண விருந்து சாப்பாட்டில் இருக்கும் டேஸ்டான சாம்பார் ரெசிபீஸ்.. இனி வீட்டில்…

இட்லி மிளகாய்ப் பொடி செய்வது எப்படி?

கடலைப் பருப்பு – அரை கப்

உளுத்தம் பருப்பு – ஒரு கப்

காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப

பெருங்காயம் – சிறிதளவு

நல்லெண்ணெய், கல் உப்பு – தேவைக்கேற்ப

மிளகு – 1 தேக்கரண்டி

வெள்ளை எள் – 2 தேக்கரண்டி

கடாயில் நல்லெண்ணெய்விட்டு,மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒவ்வொன்றாகச் சிவக்க வறுத்து ஆறவிடவும். பிறகு, கொரகொரப்பாகப் பொடிக்கவும்.

ரோட்டோர டீ கடைகளில் கிடைக்கும் மைசூர் போண்டாவின் ரெசிபி வேண்டுமா? இதோ!

பலன்.
எளிதில் ஜீரணமாகும் இட்லியுடன், சத்துகள் நிறைந்த பொடி வகை நல்ல எனர்ஜியைத் தரும். செய்வது சுலபம் என்பதுடன் எடுத்துச் சொல்வதற்கும் ஏதுவானது.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment