எவ்வளவு செஞ்சாலும் உடனே காலியாகும் நெல்லிக்காய் துவையல்!

By Velmurugan

Published:

இட்லி,தோசை போன்ற உணவுகளுக்கு துவையல் என்பது மிகவும் முக்கிமானதாகும். இதை ஒரே மாதிரியாக வைத்தால் அனைவருக்கும் எளிதில் சலித்துவிடும். ஆகையால் வித விதமாக நம்மால் துவையல் செய்து கொடுக்க முடியும். அதில் ஒன்று தான் உடம்புக்கு மிகவும் சத்தான நெல்லிக்காய். முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கியமானது. அதை வைத்து இப்போ ஒரு துவையல் செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் – 5,

காய்ந்த மிளகாய்- 3 ,

பச்சை மிளகாய் – 2,

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை ,

தேங்காய் துருவல் – சிறிதளவு ,

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், அல்லது புளி – சிறிதளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் நெல்லிக்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பின்னர் அதன் கொட்டையை நீக்கி தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர், மிக்ஸியில் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு அல்லது புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதில் கடைசியாக நெல்லிக்காய் மற்றும் உப்பு சேர்த்து இறுதியாக அரைத்து கொள்ளவும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஈஸியா முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுங்க!

இப்போது துவையல் ரெடி, தேவைப்பட்டால் தாளித்து கொள்ளவும்.

Leave a Comment