ஃப்ரைடு ரைஸ் சொன்னாலே எல்லோருக்கும் பிடிக்கும், அதில் புதுவிதமாக இந்த முறை பேபி கார்ன் வைத்து ஃப்ரைடு ரைஸ் செய்யலாமா?
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி – 2 கப் ,
பேபி கார்ன் – கால் கிலோ,
தேங்காய் – ஒரு மூடி,
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்புன்,
காரட் – 50 கிராம்,
பீன்ஸ் – 50 கிராம்,
பட்டாணி – 50 கிராம்,
கொத்தமல்லித் தழை – கையளவு ,
புதினா – கையளவு,
கரம் மசாலாத் தூள் – ஒரு டீஸ்புன் ,
நெய் – தேவைக்கு ஏற்ப ,
உப்பு – தேவைக்கு ஏற்ப
அரை கப் ரவா இருக்கா? ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!
செய்முறை
முதலில் தேங்காயை அரைத்து வடிகட்டி பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பேபி கார்ன், காரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
அதன் பின் கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவை போட்டு நன்கு வதக்கவும்.கடைசியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
நெய்யை மேலே ஊற்றி இறக்கினால் சுவையான பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ் ரெடி.