உணவின் சுவை நாவில் அப்படியே இருக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக சமையல் டிப்ஸ்!

Published:

அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது பெரும்பாலும் மல்லித்தழை, இஞ்சி சற்று சேர்க்கலாம். ஆனால் சைவ உணவு வகைகளில் இவற்றை குறைந்த அளவு இருந்தாலே போதும்..

மட்டன் குருமா, வெஜ் குருமா என அணைத்து வைகையான குருமா தயாரிக்கும்போது தேவைக்கேற்ப ஒரு கப் கெட்டித் தயிர் சேர்ப்பது என்பது ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

samaiyal tips 1

எந்த உணவிலும் தக்காளியை நறுக்கிச் சேர்க்காமல், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உணவில் சேர்த்தால் கலர்ஃபுல்லாக தக்காளியின் சுவை நன்றாக உணவில் தெரியும் இருக்கும்.

எந்த வைகையான கூட்டு பொரியல் செய்தாலும் சிறிது தேங்காய்த்துருவல், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு சீரகம் சேர்த்து நன்கு போடி பொடியாக அரைத்து சேர்த்தால் அதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.

எந்த வகை காரக்குழம்பு செய்தாலும் முடியும் தருவாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயையும் சேர்க்கலாம்.அப்போது காத்திருந்து வரும் மணத்திற்காக காரக்குழம்பு பிடிக்காதவர்கள் கூட விரும்பி அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

முறுமுறுவன ஹோட்டல் சுவையில் வெங்காய ரவா தோசை வீட்டிலே செய்வது எப்படி?

தேங்காய் அரைத்து ஊற்றி செய்யும் குழம்பு வகைகளுக்கு தேங்காயைத் துருவி சூடான எண்ணெயில் சிறிது வதக்கி எடுத்து அரைத்து குழம்பில் ஊற்றினால் வித்தியாசமான சுவை கிடைக்கும்..

மேலும் உங்களுக்காக...

Leave a Comment