அட்சய திருதியையில் விஷ்ணு, மகாலட்சுமிக்கு பிடித்த வெண்பொங்கல் செய்வது எப்படி?!

Published:

விஷ்ணு, மகாலட்சுமிக்கு நைவேத்தியமாய் வெண்பொங்கல், தயிர்சாதம் செய்து படைப்பது வழக்கம். லட்சுமி கடாட்சம் பொங்கும் அட்சய திருதியை நாளில் சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 கப்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

பச்சைப் பருப்பு(அ)பாசிப்பருப்பு – 3/4 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நெய் – 1 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

முந்திரி – 10

மிளகு – 1 டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு நசுக்கியது

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து நன்கு கழுவிய பிறகு 5கப் தன்ணீர் மற்றும் தேவையான உப்பு தேர்த்து குக்கரில் 5 முத 6 விசில் விட்டு குழைய வேகவைத்து கொள்ளவும். பிறகு ஒரு வானலில் சிறிதளவு நெய் மற்றும்எண்ணெய் ஊற்றி சூடான பிறகு மிளகு,சீரகத்தை முந்திரிபருப்பு மற்றும் தேனையான அளவு கருவேப்பிலை, பெருங்காயம்,நசுக்கிய இஞ்சி சேர்த்து பொறித்து எடுத்து குழைய வேக வைத்திருக்கும் பொங்கலில் சேர்க்கவும். சிறிதளவு நெய் தேர்த்து கிளறி விட்டால் வெண் பொங்கல் தயார். இதனை லட்சுமி, விஷ்ணுபகவானுக்கு படைத்து தானம் செய்தால் சிறந்த பலனை பெறலாம்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment