அழுகிய முட்டை.. புழுக்களுடன் பழங்கள்.. Zepto அனுப்பிய பொருட்களால் இளம்பெண் அதிர்ச்சி..!

  ஆரம்ப கட்டத்தில், வீட்டில் சமைத்த உணவையே பொதுமக்கள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, வார இறுதியில் மட்டும் ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் கலாச்சாரம் ஏற்பட்டது. ஆனால், இப்போது பல வீடுகளில் சமையல் செய்வதே…

zepto

 

ஆரம்ப கட்டத்தில், வீட்டில் சமைத்த உணவையே பொதுமக்கள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, வார இறுதியில் மட்டும் ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் கலாச்சாரம் ஏற்பட்டது. ஆனால், இப்போது பல வீடுகளில் சமையல் செய்வதே இல்லை. பல உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் தான் உணவு பொருள்கள் வாங்கப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள் மட்டும் இன்றி, காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் உள்பட அனைத்து பொருட்களுமே தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், அதே நேரத்தில், நாம் ஆர்டர் செய்யும் பொருள் தரமாக வருகிறதா என்பதில் பல நேரங்களில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அந்த வகையில், Zepto என்ற நிறுவனம் டெலிவரி செய்த முட்டை மற்றும் பழங்கள் தரம் குறைவாக இருப்பதாக, ஆன்லைனில் ஒரு வீடியோவை இளம் பெண் ஒருவர் பதிவு செய்துள்ள நிலையில், பலர் அவரது கருத்துக்கு ஆமோதித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், அந்த இளம் பெண் ஒரு முட்டையை உடைத்து, வழக்கத்துக்கு மாறாக கருப்பு நிற திரவமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேலும், தர்பூசணியில் வெள்ளை நிறப் புழுக்கள் இருப்பதைப் பார்த்தும் அதிர்ச்சி அடைகிறார். அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராமில், “இப்படிப் பொருள்களை டெலிவரி செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒவ்வொரு முறையும் நீங்கள் கெட்டுப் போன பழங்களையும், கெட்டுப்போன முட்டைகளையும் தான் அனுப்புகிறீர்கள். இனிமேல் உங்களிடம் நான் ஆர்டர் செய்ய மாட்டேன். மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள். தரத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களால் நாங்கள் அதிக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலரும் தங்களுக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளதாக Zeptoவை குறித்து கூறுகின்றனர். “பிக் பாஸ்கெட் (Big Basket) மற்றும் ப்ளிங்கிட் (Blinkit) உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் தரமான பொருட்களை டெலிவரி செய்வதாகவும், Zepto எப்போதுமே தரமற்ற பொருள்களை டெலிவரி செய்வதாகவும் கூறி வருகின்றன.”

இளம் பெண்ணின் இந்த பதிவுக்கு பதில் கூறிய Zepto நிறுவனம், “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இனிமேல் நாங்கள் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதை சரிசெய்ய விரும்புகிறோம். உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட பொருட்கள் திருப்தி இல்லை என்றால் சிரமத்துக்கு வருந்துகிறோம். உங்கள் ஆர்டர் விவரங்களை சொன்னால் நாங்கள் உங்களுக்கு தரமான பொருள்களை அனுப்பி வைக்கிறோம்,” என்று கூறியுள்ளது.

https://www.instagram.com/reel/DKhhClBSNiv/?utm_source=ig_web_button_share_sheet