வாட்ஸ் அப் சேட் ஹிஸ்ட்ரியை QR கோட் மூலம் அனுப்ப முடியுமா? இதோ முழு விபரங்கள்..!

Published:

வாட்ஸ் அப் என்பது தற்போது ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாத ஒரு சமூக வலைதளமாக மாறிவிட்டதை அடுத்து இதில் பல்வேறு புதுப்புது வசதிகளை வாட்ஸ்அப் நிர்வாகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நம்முடைய வாட்ஸ் அப்பில் உள்ள ஹிஸ்டரிகளை அப்படியே QR கோடு மூலம் இன்னொரு மொபைலுக்கு அல்லது இன்னொரு நபருக்கு அனுப்பும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதி குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

உங்கள் வாட்ஸ் அப் சேட் ஹிஸ்ட்ரியை QR குறியீடு மூலம் அனுப்ப என்னென்ன தேவை என்பதை பார்ப்போம்.

* வாட்ஸ்அப் நிறுவப்பட்ட இரண்டு மொபைல்கள்

* இரண்டு சாதனங்களும் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட வேண்டும்.

* இரண்டு சாதனங்களும் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பில் இயங்க வேண்டும்.

QR குறியீடு மூலம் உங்கள் வாட்ஸ் அப் ஹிஸ்ட்ரியை எவ்வாறு அனுப்புவது?

1. உங்கள் மொபைலில் வாட்ஸ் அப்-ஐ ஓப்பன் செய்து Settings > Chats > Chat transfer என செல்லவும்

2. உங்கள் திரையில் QR குறியீட்டைக் காண்பீர்கள்.

3. இப்போது எந்த மொபைலுக்கு அனுப்ப வேண்டுமோ, அந்த மொபைலில் வாட்ஸ் அப் -ஐ ஓப்பன் செய்து Settings > Chats > Chat transfer என்பதற்குச் செல்லவும்.

4. இப்போது உங்கள் மொபைலில் உள்ள QR குறியீட்டை அனுப்ப வேண்டிய மொபைல் மூலம் ஸ்கேன் செய்யவும்.

5. வாட்ஸ் அப் உங்கள் சேட் ஹிஸ்ட்ரியை அனுப்ப தொடங்கும்.

6. பரிமாற்றம் முடிந்ததும், உறுதிப்படுத்தல் செய்தியைக் காண்பீர்கள்.

உங்கள் வாட்ஸ் அப் சேட் ஹிஸ்ட்ரியை QR குறியீடு மூலம் மாற்றும்போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இதோ:

* உங்கள் மொபைலில் உள்ள சேட் ஹிஸ்ட்ரி மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். உங்கள் ஹிஸ்ட்ரியின் சில பகுதிகள் கிளவுடில் சேமிப்பு வைத்திருந்தால் அதை அனுப்ப முடியாது.

நீங்கள் வைத்திருக்கும் சேட் ஹிஸ்ட்ரியின் அளவைப் பொறுத்து பரிமாற்றம் செய்யப்படும் நேரம் மாறுபடலாம்.

பரிமாற்றச் செயல்பாட்டின் போது இரண்டு மொபைல்களும் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

பரிமாற்றச் செயல்பாட்டின் போது ஏதேனும் சிக்கல்களைச் சந்தித்தால், இரண்டு மொபைல்கள் மூலம் மீண்டும் முயற்சிக்கவும்.

மேலும் உங்களுக்காக...