சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! யாருப்பா அது?

Published:

முன்னனி சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற சமையல் ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்றவர் மோனிஷா பிளெஸ்ஸி. மக்களிடம் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பு மூலம் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்க உள்ளார்.

அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய தமிழ் திரைப்படமான மாவீரன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். இந்த ஆக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் மிஷ்கின், சுனில், மோனிஷா பிளெஸ்ஸி, யோகி பாபு, சரிதா மற்றும் பலர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மடோன் அஷ்வின் எழுதி இயக்கியுள்ளார். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே வித்து அய்யன்னா மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் செய்துள்ளனர். ரியாலிட்டி ஷோவில் கோமாளியாக மோனிஷா பிளெஸ்ஸி நடித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

moonis

இனி இவர் மட்டுமே தன்னுடைய வாழ்க்கை என பல்டி அடித்த ரட்சிதா! அவங்க எப்பவுமே அப்படித்தா….

இந்நிலையில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்துள்ள அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் பிரபலமான ரியாலிட்டி ஷோ KPY சீசன் 8-லும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...