உன் பார்வையில் ஓராயிரம் கவிதைகள்.. பார்வையாலே இனி புகைப்படம், வீடியோ எடுக்கலாம்.. அறிமுகமாகியுள்ளது சியோமியின் AI கிளாஸ்… விலை எவ்வளவு?

  சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, தனது புதிய சாதனமாக சியோமி AI கண்ணாடியை (Xiaomi AI Glasses) கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடி, சியோமியின் சொந்த…

AI glass

 

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, தனது புதிய சாதனமாக சியோமி AI கண்ணாடியை (Xiaomi AI Glasses) கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடி, சியோமியின் சொந்த வெலா ஓஎஸ் (Vela OS) இயக்க முறைமையில் இயங்குகிறது. மேலும், அதிநவீன ஸ்னாப்டிராகன் AR1+ சிப் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த AI கண்ணாடியில் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. மெட்டா ரே-பான் AI கண்ணாடி போலவே, இதில் பயனர்களின் பார்வை வழியாகவே வீடியோ பதிவு செய்யவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவுகிறது. இந்த கண்ணாடியை அணிந்திருக்கும் பயனர்கள், நேரடி பொருள் அடையாளம் காணுதல், உரை மொழிபெயர்ப்பு, மற்றும் குரல் தொடர்பான பல்வேறு உதவிகளை பெறலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

சியோமி AI கண்ணாடியின் நிலையான மாடலின் விலை Cஇந்திய மதிப்பில் சுமார் ரூ. 23,900 ஆகும். ஒற்றை வண்ண எலக்ட்ரோக்ரோமிக் பதிப்பின் விலை சுமார் ரூ. 32,200 ஆகவும், மிகவும் விலையுயர்ந்த பல வண்ண எலக்ட்ரோக்ரோமிக் பதிப்பின் விலை சுமார் ரூ. 35,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி AI கண்ணாடி தற்போது சீனாவில் கருப்பு, பழுப்பு மற்றும் பச்சை வண்ணங்களில், நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கிறது.

சியோமி AI கண்ணாடியின் சிறப்பு அம்சங்கள் என்றால் ஆண்ட்ராய்டு 10 மற்றும் iOS 15 அல்லது அதற்கு பிந்தைய ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கலாம். இருப்பினும், இந்த கண்ணாடியின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள, சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கொண்ட ஒரு தொலைபேசியுடன் இணைப்பது அவசியம்.

சியோமி AI கண்ணாடி ஸ்னாப்டிராகன் AR1+ சிப், 4GB ரேம் மற்றும் 32GB சேமிப்பகத்துடன் வெளியாகியுள்ளது. இதில் சோனி IMX681 சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 4,032×3,024 பிக்சல் புகைப்படங்களையும், 2K/30fps வீடியோக்களையும் பதிவு செய்யும் திறன் கொண்டது. மேலும், ஆடியோவை திறம்பட பதிவு செய்ய ஐந்து மைக்ரோஃபோன்கள் இதில் உள்ளன.

சியோமி AI கண்ணாடியில் வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.4 ஆகியவை இணைப்பு விருப்பங்களாக உள்ளன. இந்த ஸ்மார்ட் கண்ணாடி, சியாவோ AI உதவியாளரையும் ஆதரிக்கிறது. இது 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு, பொருட்களை அடையாளம் காணுதல், மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேமரா வழியாக உணவுகளின் கலோரிகளை அடையாளம் காணும் வசதியையும் வழங்குகிறது.

சியோமி இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடியில் 263mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியை பொருத்தியுள்ளது. இது நீண்ட பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது. USB Type-C போர்ட் வழியாக 45 நிமிடங்களுக்குள் இதை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.