இரண்டே நாளில் ரூ.1.45 லட்சம் கோடி நஷ்டம்… 7 வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி!

By Bala Siva

Published:

உலக பணக்கார பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து இந்திய தொழில் அதிபர் அதானி ஒரு சில நாட்களில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் பயங்கரமாக சரிந்து வருவதாகவும் இதனால் அவரது சொத்து மதிப்பு ஒரு சில நாட்களில் 1.45 லட்சம் கோடி சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் உலக பணக்காரர் பட்டியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவது இடத்தில் இருந்த அதானி தற்போது ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்னும் அவரது நிறுவனங்களை பங்குகள் சரிந்து வருவதால் பத்தாவது இடத்தை விட்டு வெளியே போகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதானி நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் பங்குச்சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு கூறியது. இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானி குழுமங்களின் பங்குகள் பயங்கரமாக சரிந்து வருகிறது என்பதும் இதனால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாக அதானி அறிவித்துள்ள நிலையில் அந்த வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.