மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை மணந்த 70 வயது மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்

Published:

மகன் இறந்ததால் இளம் வயது மருமகளை 70 வயது மாமனார் திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர் என்ற பகுதியில் 70 வயது கைலாஷ் யாதவ் என்பவரது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து அவருடைய மருமகள் இளம் விதவையாகி இருந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னால் மனைவியை இழந்த கைலாஷ் யாதவ் தனது மருமகளையே மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் இது குறித்து தனது உற்றார் உறவினர் நண்பர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு மருமகளுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கைலாஷ் யாதவ் மற்றும் அவரது மருமகள் பூஜா ஆகியோரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மருமகளையே மாமனார் திருமணம் செய்வதா? என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்தபோது மருமகள் பூஜாவின் சம்மதத்தின் பெயரிலேயே இந்த திருமணம் நடந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து சட்டப்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. மகன் இறந்ததால் 28 வயது இளம் பெண்ணை 70 வயது மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...