சென்னை சம்பளத்தை மிஞ்சும் கிராமத்து ஜுஸ் கடை.. வைரலான ஆட்கள்தேவை பேனர்.. சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Published:

தற்போது கை நிறைய சம்பளம் என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. 10-ல் 3 பேருக்கே தகுதிக்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. அதிலும் கிராமத்து இளைஞர்கள் என்றால் போராடித்தான் முன்னுக்கு வர வேண்டியிருக்கிறது. அரசு வேலை என்பதும் எட்டாக்கனியாகிவிட்ட சூழலும் நிலவி வருகிறது.

இருக்கும் வேலை வாய்ப்புகளை வட இந்தியர்கள் தட்டிப் பறித்து விடுகின்றனர். இதனால் சொற்ப சம்பளத்தில் கூலிக்கு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் இந்தத் தலைமுறை இளைஞர்கள். மேலும் அதில் வாடகை, இம்.எம்.ஐ, பெட்ரோல், கல்வி, மருத்துவம் என பல செலவுகளும் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுய தொழில் என்பது பலருக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் மருந்தாக உள்ளது. சரியான திட்டமிடலுடன் உறுதியாக வேலையில் கண்ணுங் கருத்துமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞான புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஜுஸ் கடையில் வைத்துள்ள பேனர் இணையத்தை வைரலாக்கி வருகிறது.

அந்த பேனரில் கரும்புச்சாறு பிழியும் வேலைக்கு ஆட்கள் தேவை என்றும். அதற்குக் கல்வித் தகுதி பி.இ., பி.ஏ., பிஎஸ்.சி., போன்ற பட்டப் படிப்பும், சம்பளமாக ரூ. 18,000 மற்றும் வேலை நேரம் காலை 8.30 முதல் இரவு 9.30 வரை எனவும் அந்த பேனரில் வைத்துள்ளார்.

இனி கிரெடிட் கார்டு தேவையில்லை.. கடன் கொடுக்கிறது UPI.. வட்டியும் குறைவு.. முழு விவரங்கள்..!

கரும்புச்சாறு பிழியும் வேலைக்குச் சம்பளம் பதினெட்டாயிரமா என அனைவரும் வாயைப் பிளந்து கொண்டிருக்க மேலும் அக்கவுண்ட்ஸ் பார்ப்பதற்கு தனி சம்பளமாக ரூ.2000 கூடுதலாகவும் சேர்த்து 20,000 சம்பளம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாரையும் சார்ந்திராமல் உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இளைஞரின் இந்த முன்னேற்றம் அடுத்தடுத்த ஆட்களையும் எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் சாதாரண ஹோட்டல்களில் சர்வராக பணியாற்றுபவர்களுக்கே குறைந்தது 2 வேளை சாப்பாடு, டிப்ஸ், உள்ளிட்டவற்றுடன் சேர்த்து ரூ. 15,000-க்கும் அதிகமாக சம்பளம் கிடைக்கிறது.

எனவே வேலை என்பது வாழ்வில் முன்னேறுவதற்காகத் தான். இதில் கௌரவம் பார்ப்பது என்பது நம் தலையில் நாமே மண்ணை வாரி இறைத்துக் கொள்வதற்குச் சமம். எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஆழ்ந்த ஈடுபாட்டுன் செய்யும் போது அதில் 100% வெற்றி நிச்சயமாகிறது.

மேலும் உங்களுக்காக...