மனைவி செய்த கேலியான கிண்டலை சவாலாக எடுத்துக் கொண்டு மிக்ஸி தயாரிக்கும் தொழிலை தொடங்கிய தொழிலதிபர், 100 கோடி மிக்ஸிகள் தயாரித்து சாதனை செய்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் “ஸ்மீத் மிக்ஸி” என்றால் பெயர் போனது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் விற்பனை ஆகி வருவதாக கூறப்படுகிறது.இந்த மிக்ஸி தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்குவதற்கான காரணம், அதன் உரிமையாளரின் மனைவியே. அவரது கேலி, கிண்டலே இந்த நிறுவனத்தின் பின்னணியாக இருந்தது.
ஜெர்மன் நிறுவனத்தில் பணிபுரிந்த எஸ்.பி. மதூர் என்பவர் தனது மனைவியின் மிக்ஸி பழுதாகிவிட்டது என்று கேட்டவுடன், வெளிநாட்டிலிருந்து ஒரு மிக்ஸியை இறக்குமதி செய்து பரிசாக அளித்தார். ஆனால், அந்த மிக்ஸி சில வாரங்களில் மீண்டும் பழுதாகிவிட்டது.
அதை சர்வீஸ் செய்ய இந்தியாவில் எங்கும் இடமில்லை என்பதை அறிந்த அவரது மனைவி, நகைச்சுவையாக, “உங்களால் இதை சரி செய்ய முடியுமா?” என சவால் விட்டார். அந்த ஜெர்மன் மிக்ஸியை அவரால் சரி செய்ய முடியவில்லை. ஆனால், அதே நேரத்தில் இந்திய சமையல் அறைகளில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு புதிய மிக்ஸி கிரைண்டரை உருவாக்கினார்.
இந்திய சமையலுக்கு தேவையான கடினமான பொருட்களையும் அரைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த மிக்ஸிதான் “ஸ்மீத் மிக்ஸி”. “ஸ்மீத் ” என்றால் சமஸ்கிருதத்தில் “நல்ல நண்பன்” எனப் பொருள். தனது நான்கு நண்பர்களுடன் இணைந்து அவர் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.
அதிக சக்தி, நீடித்த உழைப்பு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, சிறந்த தொழில்நுட்பத் திறமை, சரியான விளம்பரம் ஆகியவற்றின் கலவையாக இந்த மிக்ஸி தொழிற்சாலை இயங்கியது. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றது. 1980 ஆம் ஆண்டுகளிலேயே மாதத்திற்கு 50,000 மிக்ஸிகள் விற்பனை செய்யப்பட்டன.
100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய இந்த நிறுவனம், இன்று உலக அளவில் பிரபலமானது. இதற்கு பின்னணியில், அவரது மனைவி செய்த ஒரு சின்ன கேலி, கிண்டலே காரணம். அதன் பிறகு, அவரது மனைவியும் கணவருக்கு துணையாக பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.