திருமணம் செய்தால் உயிர் நமக்கில்லை.. என்னை காதலனுடன் சேர விடாவிட்டால் உன்னை 55 துண்டுகளாக வெட்டுவேன்.. கணவனை மிரட்டிய மனைவி..

  கணவர்கள் மீதான வன்முறை குறித்த சமூக வலைத்தள விவாதங்கள் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் இருந்து ஓர் அதிர்ச்சி சம்பவம் வெளிப்பட்டுள்ளது. ஆராதனா என்ற பெண், தனது ‘ஆன்லைன்…

knife

 

கணவர்கள் மீதான வன்முறை குறித்த சமூக வலைத்தள விவாதங்கள் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் இருந்து ஓர் அதிர்ச்சி சம்பவம் வெளிப்பட்டுள்ளது. ஆராதனா என்ற பெண், தனது ‘ஆன்லைன் காதலரை’ பிரித்தால் கணவரை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அவர் தனது காதலனை, பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு வழியாக சந்தித்ததுதான் இதில் விசித்திரம்.

ஆராதனாவும் ஷிவாவும் ஆன்லைன் கேமிங் தளத்தில் பழகிய நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. ஷிவா பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர். இவர் ஆராதனாவை சந்திக்க அவரது கணவர் வீட்டிற்கே வந்திருக்கிறார். காதலனின் இந்த திடீர் வருகை ஆராதான கணவர் ஷீலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. காதலன் ஷிவாவை நேரில் பார்த்ததும், ஆராதனா தன் கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு, தனது ஆன்லைன் காதலனுடன் வாழ வேண்டும் என்று பிடிவாதமாக வற்புறுத்த தொடங்கியுள்ளார்.

தனக்கும் தனது காதலனுக்கும் இடையில் வந்தால், மீரட்டில் நடந்த கொலை வழக்கில் செய்தது போல, ஷீலுவை ’55 துண்டுகளாக’ வெட்டி ஒரு பேரலில் போட்டுவிடுவேன்” என்று ஆராதனா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷீலு குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரை தொடர்ந்து ஷிவா கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த ஆராதனா, காவல்துறை அதிகாரிகளிடம் தனது காதலனுடன் செல்ல வேண்டும் எனவும், தனது கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும், மது அருந்துபவர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் காவல்துறாஇ அவரது வாதத்தை ஏற்கவில்லை. ஷிவா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. திருமணம் செய்து கணவருடன் குழந்தையும் பெற்றுவிட்டு அதன் பிறகு காதலனுக்காக கணவனையே கொலை செய்வேன் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். இப்போது எல்லாம் திருமணம் செய்யவே பயமாக இருக்கிறது. தேனிலவு செல்லும்போது கணவரை கொலை செய்யும் கொலைகாரிகள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது மேற்கத்திய கலாச்சாரத்தை விட மிக மோசமாக இருக்கிறது. இனிமேல் திருமணம் செய்யும் முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து திருமணம் செய்யுங்கள்’ என பலர் அறிவுரை கூறும் வருகின்றனர்.