ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கணவரை காதலரின் உதவியுடன் கொலை செய்து, அவருடைய பிணத்தை காதலரின் டூவீலரில் எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரவீனா என்பவர், YouTube சேனல் வைத்திருக்கும் நிலையில், சுரேஷ் என்ற யூடியூபரி காதலித்தார். இருவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்த நிலையில், அதன் பிறகு இருவரும் சேர்ந்து வீடியோக்கள் உருவாக்கி வந்தனர். அதன் பின், 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், சுரேஷ் வெளியூர் சென்றிருந்தபோது, ரவீனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியூர் சென்ற சுரேஷ், வீட்டிற்கு திரும்பியபோது தனது மனைவி, பிரவீன் என்பவருடன் படுக்கை அறையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், காதலர் பிரவீனுடன் சேர்ந்து, ரவீனா தனது கணவரை கொலை செய்து, பிணத்தை டூவீலரில் ஆறு கிலோமீட்டர் தள்ளி உள்ள புதரில் தூக்கி எறிய சென்றனர். பிணத்துடன் இருவரும் டூவீலரில் சென்ற சிசிடிவி காட்சிகளை அடுத்தே ரவீனா கைது செய்யப்பட்டார்.
தற்போது பிரவீன் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கணவனை கொலை செய்து, அவருடைய பிணத்தை காதலரின் டூவீலரிலேயே கொண்டு சென்ற மனைவியின் செயல், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
https://x.com/republic/status/1912406961016172600