அரசியலில் வாஷிங் மெஷின்ன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க.. உண்மையான வாஷின் மிஷின் பாஜகவும் திமுகவும் தான்.. அதுக்கு ஆதாரம் இருக்கும்…மாஜி மந்திரி உள்ள வந்த உடனே அவரோட கேஸையெல்லாம் அமுக்கி, க்ளோஸ் பண்ணி விடுறதுக்கு எங்க தலைவன் ஒன்னும் இங்க ‘வாஷிங் மிஷின்’ கடை நடத்தல! தவெகவுக்கு வர்றவங்க அவங்க தப்பை சட்டப்படி கோர்ட்லதான் நிரூபிக்கணும். அழுக்கை முழுசா வெளுத்து எடுக்காம எங்களை பார்த்து ‘வாஷிங் மெஷின்’னு சொன்னா… தியேட்டர்ல மட்டும் இல்லடா, பாலிடிக்ஸ்லயும் எங்க தலைவனோட ‘லியோ’ மோட் ஆன் ஆகிடும்… பார்த்து உஷாரு!

அரசியலில் ‘வாஷிங் மெஷின்’ என்ற சொல், எதிர்க்கட்சிகளில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆளுங்கட்சிக்கு மாறும்போது, அவர்கள் மீதான வழக்குகள் நீர்த்துப்போக செய்யப்பட்டு அவர்கள் ‘தூய்மையானவர்களாக’ மாற்றப்படும் நிகழ்வை குறிக்க…

washing machine

அரசியலில் ‘வாஷிங் மெஷின்’ என்ற சொல், எதிர்க்கட்சிகளில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆளுங்கட்சிக்கு மாறும்போது, அவர்கள் மீதான வழக்குகள் நீர்த்துப்போக செய்யப்பட்டு அவர்கள் ‘தூய்மையானவர்களாக’ மாற்றப்படும் நிகழ்வை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக தமிழக அரசியலிலும் இந்த விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான முதல்வர் விஜய் அவர்களின் அரசு, எதிர்க்கட்சிகளால் இந்த சலவை இயந்திர விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலை உற்றுநோக்கினால், தவெக அரசை இப்போதே வாஷிங் மெஷின் என்று அழைக்க முடியாது என்பதற்கும், மாறாக திமுக தான் தமிழகத்தின் உண்மையான ‘ஒரிஜினல் வாஷிங் மெஷின்’ என்பதற்கும் வலுவான சான்றுகள் உள்ளன.

ஒரு புதிய அரசியல் கட்சி அல்லது அரசு சலவை இயந்திரமாகச் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுவதற்கு முன்னால், அதற்கான அடிப்படைகள் அங்கு நிகழ்ந்துள்ளனவா என்பதை ஆராய வேண்டும். மத்தியில் பாஜக அரசு எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் வழக்குகளைப் போட்டு, பின்னர் அவர்கள் கட்சி மாறியவுடன் அவ்வழக்குகளை முடக்கியதோ, அதுபோன்ற ஒரு செயல்பாடு இங்கு நடக்க வேண்டும். ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இதுவரை எந்தவொரு முன்னாள் அமைச்சர்கள் அல்லது மாற்றுக்கட்சித் தலைவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலமாக புதிய வழக்குகளைப் பதிவு செய்யவோ அல்லது அவர்களை மிரட்டித் தன் வசம் இழுக்கவோ இல்லை.

எதிர்க்கட்சிகள் வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்றவர்கள் தவெகவில் இணைந்ததை மையப்படுத்தியே அமைகிறது. ஆனால், அவர்கள் மீது ஏற்கனவே இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் தவெக அரசால் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்படவோ அல்லது முழுமையாக நீக்கப்படவோ இல்லை. சலவை இயந்திரத்தின் உண்மையான வேலை, அழுக்கை முழுமையாக நீக்கி வெள்ளையாக்குவதுதான். விஜய் அவர்களின் அரசு சி. விஜயபாஸ்கர் மீதான வழக்குகளை சட்டப்பூர்வமாக முழுமையாக முடித்து வைத்தால் மட்டுமே, இந்த அரசை வாஷிங் மெஷின் என்று விமர்சிக்க முடியும். அதுவரை இதனை ஒரு அரசியல் கட்சி சேர்க்கையாக மட்டுமே பார்க்க முடியும்.

மறுபுறம், தமிழக அரசியல் வரலாற்றில் திமுக தான் சலவை இயந்திர அரசியலின் முன்னோடி மற்றும் ‘ஒரிஜினல் வாஷிங் மெஷின்’ என்று கூறுவதற்கு மிகத் தெளிவான, சமீபத்திய ஆதாரங்கள் உள்ளன. முன்னாள் அதிமுக மூத்த தலைவரும் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கின் போக்கே இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். 2011-16 அதிமுக ஆட்சிக்காலத்தில் பெருங்களத்தூரில் ஒரு கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதில் ₹27.9 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை மத்திய அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வந்தது.

இந்தச் சூழலில், கடந்த ஜனவரி மாதம் வைத்திலிங்கம் தனது அதிமுக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவர் இணைந்த அடுத்த சில வாரங்களிலேயே, பிப்ரவரி மாத இறுதியில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த ஊழல் வழக்கில் எந்தவித போதிய ஆதாரமும் இல்லை எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கை முடித்துக்கொள்வதாக ‘குளோஷர் ரிப்போர்ட்’ தாக்கல் செய்தது. ஒரு தலைவர் கட்சி மாறிய உடனேயே, அவர் மீதான பல கோடி ரூபாய் ஊழல் வழக்கு மாநில அரசின் புலனாய்வு அமைப்பால் அவசர அவசரமாக மூடப்பட்டதுதான் அப்பட்டமான வாஷிங் மெஷின் அரசியல் ஆகும்.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்தே, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் இந்த வழக்கைத் தூசு தட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. இதன் மூலம், தன் கட்சியில் இணையும் தலைவர்களின் ஊழல் கரைகளைக் கழுவித் துடைப்பதில் திமுக மிகத் துரிதமாகச் செயல்பட்டு, தங்களை ஒரிஜினல் வாஷிங் மெஷினாக நிரூபித்துள்ளது. எனவே, இன்னும் எந்த வழக்குகளையும் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்யாத தவிக அரசை விமர்சிப்பதை விடுத்து, தங்களுக்கு சாதகமாக வழக்குகளை முடித்துக்கொண்ட திமுகவின் இந்த சலவை இயந்திர அரசியலைத்தான் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.