ரூ.32,999 விலையில் ஒரு சூப்பரான 4K அல்ட்ரா HD LED ஆண்ட்ராய்டு டிவி.. முழு விவரங்கள்..!

Published:

ஒன்ப்ளஸ் நிறுவனம் மொபைல் ஃபோன்களை மட்டும் இன்றி டிவிகளையும் தயாரித்து வருகிறது என்பதும் அந்நிறுவனத்தின் டிவிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரூ.32,999 என்ற விலையில் 4K அல்ட்ரா HD LED அம்சத்தில் ஒன்ப்ளஸ் வெளியிட்டிருக்கும் டிவி குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

OnePlus 50Y1S Pro டிவி 50-இன்ச் 4K UHD (3840 x 2160) LED பேனல் 10பிட் கலர் டெப்த் மற்றும் காமா எஞ்சின் அம்சத்தை கொண்டது. மேலும் HDR10+, HDR10, HLG ஆகிய அம்சத்தோடு, டால்பி ஆடியோன் 24W ஸ்பீக்கர்களையும் கொண்டது.

MediaTek MT9216 பிராசசர், 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் கொண்ட இந்த டிவியில் வைபை, புளூடூத், 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், ஒன்பிளஸ் கனெக்ட், கிட்ஸ் மோட் ஆகியவையும் உண்டு.

OnePlus 50Y1S Pro டிவியின் மேலும் சில முக்கிய அம்சங்கள் இதோ:

4K UHD டிஸ்ப்ளே: 50-இன்ச் 4K UHD டிஸ்ப்ளே, தெளிவான படங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களுடன் பிரமிக்க வைக்கும் தரத்தை வழங்குகிறது.

Gamma Engine: Gamma Engine அம்சம் இந்த டிவீயில் இருப்பதால் நிறம் மற்றும் தெளிவை மேம்படுத்தப்படுகிறது.

HDR10+: HDR10+ அம்சம் காரணமாக பரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் மாறுபாட்டை வழங்குகிறது, இதன் விளைவாக மிகவும் மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும்.

Dolby ஆடியோ: Dolby ஆடியோ ஸ்பீக்கர்கள் அதிவேக ஒலியை வழங்குகின்றன.

கூகுள் அசிஸ்டெண்ட் வசதி இருப்பதால் நீங்கள் குரல் மூலம் உங்கள் டிவியைக் செயல்படுத்த முடியும்

மொத்தத்தில் OnePlus 50Y1S Pro பல ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் பணத்திற்கான சிறந்த மதிப்புடைய 4K UHD டிவி ஆகும்,. சிறந்த படத் தரம், ஒலி, ஒளி மற்றும் மதிப்பை வழங்கும் புதிய டிவியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், OnePlus 50Y1S Pro ஒரு சிறந்த தேர்வாகும்.

இந்தியாவில் இதன் விலை ரூ.30,499 என விற்பனையாகிறது என்பதும், சில வங்கிகளின் சலுகையும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...