2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கும், புதிதாக களம் இறங்கும் நடிகர் விஜய்க்கும் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்றும், பதிலுக்கு விஜய்யும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கணிக்கப்படுகிறது. மொத்தத்தில், 2026 தேர்தல் இந்த இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதற்கான களமாகவே இருக்கும் என்கிறார்கள்.
திமுகவின் வாக்கு வங்கிக்கு ஆபத்தா?
திமுகவின் அடிப்படை வாக்கு வங்கியில், அதாவது சிறுபான்மையினர் வாக்குகளில், தமிழக வெற்றி கழகம் கை வைக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. திமுக இத்தனை ஆண்டுகளாக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக அவர்களுக்கு விழுவதுதான். ஆனால், தற்போது விஜய் களமிறங்கியிருப்பதால், சிறுபான்மையினர் வாக்குகளில் 50% வரை விஜய்க்கு செல்லும் என்று கூறப்படுவது திமுகவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் நிலை என்ன?
விஜய்யின் வருகையால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பெரிய அடி இருக்கும் எனவும், சீமானின் கட்சிக்கும் வாக்குகள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெறுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விஜய் இதுவரை பாஜகவை கொள்கை எதிரியாக குறிப்பிட்டாலும், பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல், அதிமுகவையும் அவர் வெளிப்படையாக விமர்சித்தது இல்லை. அவரது ஒரே நோக்கம், திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதுதான் அவரது முக்கிய இலக்காக உள்ளது. இது திமுகவுக்கு மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகளுக்கும் மிகப்பெரிய வாக்கு வங்கி சரிவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் சேர்ந்தால் தப்பிக்கும் என்றும், திமுக கூட்டணியில் இருந்தால் இந்த முறை பயங்கரமாக அடி வாங்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல், அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் இருந்தது. ஆனால், இனிமேல் தமிழக அரசியல் என்பது விஜய்க்கும் திமுகவுக்கும் இடையில் ஆனது என மாறிவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மொத்தத்தில், மற்ற நடிகர்கள் போல் விஜய் அரசியலில் தோல்வி அடைய மாட்டார் என்றும், எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லை என்றாலும், கண்டிப்பாக விஜய் மிகப் பெரிய வெற்றி பெறுவார் என்றும், 2026-ல் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிதான் என்றும் பலர் கணித்துள்ளனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் திரைப்படத்தின் வசனமான ழ்க்கை ஒரு வட்டம் இங்கு தோற்பவன் ஜெயிப்பான் ஜெயிப்பவன் தோற்பான்என்பது போல் இதுவரை தொடர்ச்சியாக ஜெயித்து கொண்டிருந்த திமுக தோற்கும் என்றும் விஜய் ஜெயிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது