நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழ்நாட்டு மக்களுக்காக பணி செய்ய விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து கட்சியின் பாடலையும் வெளியிட்டார் தளபதி விஜய். இது மட்டுமல்லாது, அனைவருக்கும் மதம் இனம் மொழி வேறுபாடு இல்லாமல் சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் என்று உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார் தளபதி விஜய்.
ஏற்கனவே சினிமாவில் கமிட்டான படங்களில் நடித்துக் கொடுத்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று நிரந்தரமாக அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளார் விஜய். அப்படி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கோட் .இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களை நடிக்க வைத்துள்ளோம் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன் காரணமாக கடந்த வாரம் ஆகஸ்ட் 19ஆம் தேதி நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்கு சென்று AI தொழில்நுட்பத்தில் கோட் திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நடிக்க வைக்க அனுமதி அளித்ததற்காக தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவியும் ஆன பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். இது தவிர சில நேரம் அங்கே கலந்துரையாடினார்.
இந்நிலையில் தற்போது அளித்த பத்திரிக்கையாளர்கள் பேட்டி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விஜய் தங்கள் வீட்டிற்கு வந்து என்ன கூறினார் என்பதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் விஜய் வந்து நாங்க பார்த்து வளர்ந்த பிள்ளை. அதேபோல வெங்கட் பிரபுவும் சிறுவயதிலிருந்தே நாங்க பார்த்துவிட்டு இருக்கிறோம். அதனால் இது ஒரு குடும்ப சந்திப்பு போல தான் இருந்தது. விஜய் எப்போதுமே எங்க வீட்டு பிள்ளை தான். விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன் உடன் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார் விஜய். என்னுடைய மகள்கள் விஜயபிரபாகரனும் சண்முக பாண்டியனும் அண்ணா நீங்கதான் சினிமாவில் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் அப்படின்னு சொல்லி பேசினாங்க. அப்போ விஜய் கூட தம்பி விஜய் பிரபாகரனிடம் அரசியலில் நீங்கதான் எனக்கு சீனியர் நீங்க நிகழ்ச்சிகள்ல ரொம்ப நல்லா பேசுறீங்க பிரஸ்மீட்ட ரொம்ப நல்லா கையாளுரீங்க என்று சொல்லி அரசியல் சம்பந்தமா நிறைய விஜய பிரபாகரிடம் பேசிட்டு இருந்தாரு விஜய்.
இது மட்டும் இல்லாம என்கிட்ட விஜய் முக்கியமா சொன்னது என்னன்னா கோட் திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் அண்ணா வர்ற காட்சி எல்லாமே ரொம்ப பிரம்மாண்டமா வந்து இருக்குமா முதல் நாள் காட்சி உங்களுக்கு ஸ்பெஷல் சோ அரேஞ்ச் பண்ணி இருக்கோம். நீங்க கண்டிப்பா வந்து குடும்பத்தோட வந்து பாக்கணும் அப்படின்னு சொன்னாரு என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.