திராவிட கட்சிகளின் அஸ்திவாரத்தை அசைத்த விஜய்.. இனியும் பாஜக எதிர்ப்பு என கூறி ஏமாற்ற முடியாது.. கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர் மக்கள்.. பதில் சொல்ல திணறும் ஆட்சியாளர்கள்.. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இன்னொரு இளைஞர் படையின் எழுச்சி..!

திராவிட கட்சிகள், குறிப்பாக திமுக, தங்களின் அரசியல் அடித்தளத்தை “பாஜக எதிர்ப்பு” மற்றும் “இந்துத்துவா எதிர்ப்பு” என்ற கொள்கையின் மீது கட்டமைத்து வந்தன. “நான் இல்லையென்றால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்” என்ற அச்சத்தை உருவாக்கி,…

dravidam

திராவிட கட்சிகள், குறிப்பாக திமுக, தங்களின் அரசியல் அடித்தளத்தை “பாஜக எதிர்ப்பு” மற்றும் “இந்துத்துவா எதிர்ப்பு” என்ற கொள்கையின் மீது கட்டமைத்து வந்தன. “நான் இல்லையென்றால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்” என்ற அச்சத்தை உருவாக்கி, மக்களை தங்கள் பக்கம் வைத்திருந்தனர். ஆனால், விஜய்யின் வருகை இந்த அடித்தளத்தை, அஸ்திவாரத்தை நேரடியாக தாக்கிப் பேசுகிறது. திருவாரூரில் அவர் பேசிய பேச்சு இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

திருவாரூர், திமுகவின் கோட்டை என்றாலும், கருணாநிதியின் சொந்த ஊர் என்றாலும் அங்குள்ள அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, மருத்துவமனைகள், மற்றும் விவசாயிகளின் சிரமங்கள் குறித்து விஜய் நேரடியாக பேசினார். எல்லா அரசு கட்டிடங்களுக்கும் கருணாநிதி பெயர் வைக்கும் திமுக அரசு, கருணாநிதியின் சொந்த ஊரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதே என்ற விஜய்யின் குற்றச்சாட்டு திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

இந்தத் தேரை நான்தான் ஓட வைத்தேன் என்று ஒரு தலைவர் சொல்கிறார், ஆனால் அவருடைய மகனோ இந்த தமிழ்நாடு என்ற தேரை நான்கு பக்கமும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்” என்று விஜய் மறைமுகமாக திமுக தலைமையை விமர்சித்தார். இந்த உரை, சமூக வலைத்தளங்களில் விர்ச்சுவல் வாரியர்களால் பரவலாக பகிரப்பட்டு, இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

விஜய்யின் அரசியல் பயணத்தின் மிகப்பெரிய பலமாக அவரது ஐடி விங் மற்றும் இளைஞர் ஆதரவு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் ஐடி விங் சமூக வலைத்தளங்களில் மிக துடிப்பாக செயல்படுகிறது.

இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள், தங்கள் குடும்பத்தினரிடம் விஜய்க்கு வாக்களிக்குமாறு “அன்புக் கட்டளை” இடுவதாக கூறப்படுகிறது. இது வெறும் ரசிகர் ஆதரவு அல்ல, மாறாக ஒரு தலைவரின் மீது நம்பிக்கை கொண்டு, அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஆர்வம்.

“இதுவெல்லாம் சும்மா கூடும் கூட்டமா, ஓட்டாக மாறாதுன்னு சொல்றாங்க, அப்படியா?” என்று விஜய் கேட்ட கேள்விக்கு கிடைத்த ஆரவாரம், அவரது பேச்சுகள் மக்களை எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றன என்பதை காட்டுகிறது. திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட பல அரசியல் தலைவர்கள் விஜய்யின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜய் பேசும் பேச்சுகள், ஒரு வாரத்திற்கு அரசியல் விவாதங்களை ஆக்கிரமிக்கின்றன. இது, மற்ற அரசியல் கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் கேள்விகள், மக்கள் மனதில் நேரடியாக பதிகின்றன. “எங்கள் ஊர் மாற வேண்டுமென்றால் விஜய்யை அழைக்க வேண்டுமா, நீங்கள் எதற்கு அரசாங்கத்தை நடத்துகிறீர்கள்?” என்ற கேள்வி, ஆளும் கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது.

இந்த இளம் மற்றும் தெளிவான சிந்தனையுடைய ஆதரவுப்படை, விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. இந்த எழுச்சி, 2026 தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.