விஜய் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு சிக்கலா? பிரிந்து செல்லும் கட்சிகள்?

Published:

 

விஜய் அரசியல் வருகையால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜய் கூட்டணியில் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க பின்னணியில் இருப்பது ராகுல் காந்தி தான் என்று கூறப்படும் நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் கட்சி மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணியில் அதிமுகவும் இணையலாம் என்றும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை அதிமுக வரவில்லை என்றால் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி இருக்கும் என்று பிரச்சாரம் செய்யப்படும் என்றும் நிச்சயம் இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி என்று இருக்கும் நிலையில் புதிதாக விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் உங்களுக்காக...