இந்தியாவில் முதல்முறையாக காவல் துறையில் AI டெக்னாலஜி.. துரிதமாக விசாரணை..!

Published:

 

இந்தியாவில் முதல்முறையாக காவல் துறையில் AI  டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே AI டெக்னாலஜி என்பது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் AI டெக்னாலஜி சினிமா துறையில் உட்பட அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு AI டெக்னாலஜியை காவல் துறையில் பயன்படுத்த முடிவு செய்து அதற்கான திட்டமும் அமைத்துள்ளது. இதற்காக MARVEL AI என்ற டெக்னாலஜி  உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த டெக்னாலஜி மூலம் குழந்தை கடத்தல், பெண் கடத்தல் குற்றம் சம்பந்தமாக காவல்துறைக்கு பங்களிக்க முடியும் என்றும் விபத்துகள், வாகன திருட்டு, கும்பல்களின் குற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்த போது MARVEL AI டெக்னாலஜியை நாங்கள் நேர்மறையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறோம் என்றும் அனைத்து வகை குற்றங்களையும் தடுக்கவும் குற்றம் நடந்தபின் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் இந்த டெக்னாலஜி காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காவல்துறை கீழ் AI டெக்னாலஜி கொண்டுவரப்பட்டது இதுவே முதல் முறை என்றும் இதன் துல்லியமான செயல்பாடுகளை பொறுத்து மற்ற மாநிலங்களும் இதை முன்னுதாரணமாக கொண்டு தங்கள் காவல்துறையில் AI டெக்னாலஜியை பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...