2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இருக்கப் போகிறது என்றும், ஒன்று விஜய் ஆட்சி அமைப்பார் அல்லது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மதிவாணன் என்பவர் கூறியபோது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தான் ‘கிங் மேக்கராக’ இருப்பார் என்றும், அவர் கைகாட்டுபவர்தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும், கண்டிப்பாக தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஒருபுறம், தி.மு.க கூட்டணி ஒருபுறம் இருக்கும் நிலையில், விஜய் தனியாக ஒரு கூட்டணி அமைக்க இருக்கிறார் என்றும், அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ராகுல் காந்தி – விஜய் சந்திப்பு விரைவில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் அமைக்கும் கூட்டணியுடன் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வந்துவிட்டால், கண்டிப்பாக இந்த கூட்டணி வெற்றி பெறும் அல்லது தொங்கு சட்டசபை அமைக்கும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், மதிவாணன் இது குறித்து கூறியபோது, “இளைய தலைமுறை ஓட்டுகள், முதல் முறையாக ஓட்டு போடுபவர்கள் மற்றும் இரண்டு கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாமல் ஓட்டே போடாமல் இருப்பவர்கள் தான் விஜய்க்கு இந்த முறை அதிகமாக வாக்குகள் கிடைக்கும். கண்டிப்பாக விஜய் ஒரு கிங்மேக்கராக இருப்பார்,” என்றும் தெரிவித்துள்ளார்.
பல விமர்சகர்கள் கூறியது போல், இந்தத் தேர்தலின் முடிவு தொங்கு சட்டசபையாகத்தான் இருக்கும் என்றும், அதனால் கண்டிப்பாக விஜய் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கிங்மேக்கர் இடத்தில் இருப்பார் என்றும் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், இதன் படி நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கமெண்ட்ஸ்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.