விஜய் கட்சி ஒரு சொப்பு கட்சி.. தேறாது.. 2026க்கு பின் நடிக்க வந்துவிடுவார்: அப்துல் முத்தலிப் ..!

  விஜய் கட்சி ஒரு சொப்பு கட்சி என்றும், அவர்களுக்கு எந்தவிதமான மெச்சூரிட்டியும் இல்லை என்றும், இந்த கட்சி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேறாது என்றும், தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் நடிக்க…

abdl

 

விஜய் கட்சி ஒரு சொப்பு கட்சி என்றும், அவர்களுக்கு எந்தவிதமான மெச்சூரிட்டியும் இல்லை என்றும், இந்த கட்சி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேறாது என்றும், தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்றும் பத்திரிகையாளர் அப்துல் முத்தலிப் என்பவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை இணைக்க முயற்சிப்பது உண்மைதான் என்றும், ஆனால் விஜய் எந்தவித தெளிவும் இல்லாமல் குழப்பத்தில் இருக்கிறார் என்றும் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளார். விஜய் நடத்திய கல்வி விழாவில் வேல்முருகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு விஜய் பதில் கூட சொல்லவில்லை என்றும், அந்த அளவுக்கு அவர்கள் அரசியல் நடத்த பயப்படுகிறார்கள் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தார்.

விஜய்க்கும் அவருடைய கட்சியினருக்கும் எந்தவிதமான அரசியல் ஐடியாவும் இல்லை என்றும், மற்றவர்கள் சொல்வதை வைத்து, “20% ஓட்டு தனக்கு இருப்பதாக தன்னைத்தானே பொய்யாக நம்பிக் கொண்டிருக்கிறார்,” என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்தார்.

விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் அந்த செல்வாக்கை வாக்காக மாற்றக்கூடிய எந்த விதமான ஏற்பாடுகளையும் அவர் செய்யாமல் இருக்கிறார்,” என்று அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை, தி.மு.க கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் கட்சிகள் சண்டை போட்டு அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்தால், நம்மிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால், தி.மு.க கூட்டணி உடையாது, எப்படியும் ஸ்டாலின் சரி செய்து விடுவார்,” என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

மொத்தத்தில் விஜய்யின் அரசியல் எடுபடாது என்றும், அவர் தேர்தலுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.