கருத்துக்கணிப்பு கணக்கு போட்டு பார்த்தா விஜய் பின்னாடி இருப்பது போல் தோன்றலாம்… ஆனா மக்கள் மனசை தொட்டு பார்த்தீங்கன்னா விஜய் தான் முன்னாடி இருப்பார்.. பெட்டி விழுறது வெறும் ஓட்டு மட்டும் இல்லை.. பழைய அரசியலுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியும் சேர்ந்துதான் விழும்.. விஜய் ஜெயிப்பாரான்னு கேட்டவங்க, ரிசல்ட்டுக்கு பின் விஜய் மட்டுமில்லை, ஒரு சகாப்தமே வந்திருக்குன்னு புரியும்..!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கும்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறும் என தவெகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மே 4ஆம் தேதி…

vijay tvk 1

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கும்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறும் என தவெகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மே 4ஆம் தேதி கிடைக்க போகும் இந்த வெற்றி என்பது வெறும் தேர்தல் முன்னிலை மட்டுமல்ல, பல தசாப்தங்களாக தமிழகத்தில் நிலவி வந்த இருதுருவ அரசியலுக்கு மக்கள் வைத்துள்ள முற்றுப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

வாக்குப்பெட்டிகள் திறக்கும்போது வெளிவருவது வெறும் ஓட்டுகள் மட்டுமல்ல, ஒரு பெரிய மாற்றத்திற்காக காத்திருந்த மக்களின் எழுச்சி என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும். கணக்கு போட்டுப் பார்த்தால் விஜய் பின்தங்கியிருப்பார் என்று கணித்த அரசியல் மேதைகளுக்கு பதிலடியாக, மக்களின் மனங்களை தொட்ட விஜய் சிம்மாசனத்தை நோக்கி மிக துணிச்சலாக நடைபோடுவார்.

தேர்தல் பிரசாரத்தின் போது விஜய்யை சூழ்ந்த கூட்டத்தை ஏளனம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு, தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும். “கூட்டம் கூடும், ஆனால் ஓட்டு விழாது” என்று விமர்சனம் செய்தவர்களின் வாய்மொழி பழமொழியை, அந்தக் கூட்டமே ஒரு பெரும் புயலாக மாறி ஓரம் கட்டும். அரசியல் தமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் இந்த மக்கள் தமக்கு பழக்கப்பட்டவர்கள் என்ற விஜய்யின் நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்கும்.

திராவிட கட்சிகளின் கோட்டைகளாக கருதப்பட்ட பல தொகுதிகளில் விஜய் முன்னிலை பெறுவார். பாரம்பரியக் கட்சிகளின் அரசியல் வியூகங்களை தகர்த்தெறிவார். குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கிகளில் விஜய் ஏற்படுத்தும் தாக்கம், அந்த சகாப்தங்களுக்கு ஒரு முடிவுரையை எழுத தொடங்கும்.

அலை அடிக்கிற வரைக்கும் தான் உங்கள் ஆட்டம், அந்த அலை கரைக்கு வந்துவிட்டால் அதன் பெயர் விஜய்” என்ற முழக்கத்திற்கு ஏற்ப, தமிழகத்தின் அரசியல் கரையை விஜய் அலை முழுமையாக கைப்பற்றிறும். எந்த தந்திரங்களும், விமர்சனங்களும் மக்கள் சக்தியின் முன்னால் செல்லுபடியாகாது என்பது இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.

மொத்தத்தில் , தமிழக அரசியல் களம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அங்கீகரிக்க காத்திருக்கிறது. மக்களின் அன்புக்கு முன்னால் எந்த அரசியல் தந்திரமும் எடுபடாது என்பதற்கு ‘தவெக’ ஸ்டைல் வெற்றி சாட்சியாக அமையும். மதுவிலக்கு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கான அதிகாரம் போன்ற விஜய்யின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என தவெகவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.