மேலும் அமெரிக்க அரசு உக்ரைனின் இந்த தாக்குதல் திட்டம் குறித்து தங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான நிலையான பதற்றத்தை கருத்தில் கொண்டால், இந்த அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கும் என்ற எதிர்பார்ப்பில், கீவ் மற்றும் பல உக்ரைனிய பகுதிகளில் வான்வழி எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உக்ரைனிய வான்வழி பாதுகாப்பு படைகள் இந்த அச்சுறுத்தலுக்கு தயாராக இருக்கின்றன. இன்றிரவு ரஷ்யா, உக்ரைன் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“உக்ரைனின் பாதுகாப்பு சேவைத் தலைவர் வாசில் மாலியுக் இன்று நடைபெற்ற நடவடிக்கையை பற்றி அறிக்கை சமர்ப்பித்தார். இது ஒரு அதிசயமான வெற்றி. இது முழுக்க முழுக்க உக்ரைனின் சாதனை. இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆண்டு, ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்கள் காத்திருந்தோம். இது நம்முடைய மிக நீண்ட தூர நடவடிக்கை.
இந்த நடவடிக்கைக்காக நமது நபர்கள் ரஷ்யப் பகுதியில் இருந்து சரியான நேரத்தில் அழைத்து வரப்பட்டனர். உக்ரைனின் வெற்றிக்காக ஜெனரல் மாலியுக்கிற்கு நன்றி தெரிவித்தேன். இதன் விவரங்கள் மற்றும் முடிவுகளைப் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட உக்ரைனின் பாதுகாப்பு சேவைக்கு உத்தரவிட்டேன்.
நிச்சயமாக, அனைத்தையும் இப்போதே வெளியிட முடியாது, ஆனால் இந்த உக்ரைனிய செயல்கள் வரலாற்று புத்தகங்களில் இடம்பெறும். உக்ரைன் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது. இந்த போரை முடிக்க ரஷ்யா முன்வரும் என்று நாங்கள் உறுதி நம்புகிறோம். இந்த போரை துவக்கியது ரஷ்யா; முடிக்க வேண்டியதும் ரஷ்யா தான் என்று தெரிவித்தார்.