2026 தேர்தலில் உதயநிதிதான் முதல்வர் வேட்பாளர்.. துரைமுருகன் பதவி பறிப்பு.. எ.வ.வேலு தான் பொதுச்செயலாளர்.. திமுகவை சிக்க வைக்க அமித்ஷா போட்ட பிளான்..!

  தி.மு.க.வில் இருந்து பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகிய இருவரும் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும், 2026 தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதே சந்தேகம் என்றும் டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது…

Udhayanidhi

 

தி.மு.க.வில் இருந்து பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகிய இருவரும் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும், 2026 தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதே சந்தேகம் என்றும் டெல்லி பத்திரிகையாளர் ராஜகோபாலன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் தி.மு.க.வில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்றும், துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் ஓரங்கட்டப்பட்டு, உதயநிதி முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த பொதுச்செயலாளர் எ.வ.வேலு தான் என்றும் மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகிய இருவருமே அவர்களாகவே ஓய்வு பெறுவதாக அறிவிப்பார்கள் என்றும், பா.ஜ.க.வில் எப்படி அத்வானி வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினாரோ, அதேபோல் துரைமுருகன் மற்றும் பொன்முடியை ஒதுங்க சொல்வார்கள் என்றும் ராஜகோபாலன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026 தேர்தலில் ஒருவேளை தி.மு.க. தோல்வி அடைந்துவிட்டால், கனிமொழி முக்கியத்துவம் பெறுவார் என்றும், பா.ஜ.க. பின்னணியில் அவர் கட்சியை கைப்பற்ற முயற்சி செய்வார் என்றும் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அவர் அவ்வாறு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு தனியாக ஒரு அறை கொடுத்துள்ளார்கள் என்றும், இதை தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் கூறி வருவதாகவும் ராஜகோபாலன் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஐந்து வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள சொத்துப் பட்டியல் அமித்ஷாவின் கையில் இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவற்றை நயினார் நாகேந்திரன் வெளியிடுவார் என்றும், அப்போது ஒரு பெரிய பிரளயமே வெடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.