இது வீடா இல்ல குப்பை மேடா.. வீட்டுக்குள் வந்த துர்நாற்றம்.. உள்ளே சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..

By John A

Published:

கோவை : கோவையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா லாக்டவுன் மொத்தமாக அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் அடியோடு மாற்றியது. இதனால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அடுத்தடுத்த தளர்வுகளால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஆனால் சிலர் இன்னும் கொரோனா தொற்றி விடுமோ என அஞ்சி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த சம்பவங்களும் நடந்தருக்கிறது.

இவற்றையெல்லாம மிஞ்சம் விதமாக கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே ஒரு தாயும், மகளும் முடங்கிக் கிடந்திருக்கின்றனர். மலைபோல் குவிந்த குப்பையால் துர்நாற்றம் வீச சமூக ஆர்வலர் ஒருவர் மாநகராட்சிக்குத் தகவல் தெரிவித்து பின் அந்தக் குப்பைகளை அள்ளினர்.

கோவை ராம் நகரைச் சேர்ந்தவர் ருக்மணி (75), இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகள் திவ்யா (45) தந்தையின் இறப்புக்குப் பின்னர் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆன்லைனின் உணவு ஆர்டர் செய்து வாங்கி உயிர் வாழ்ந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் இருக்க வீட்டில்குப்பைகள் சேர ஆரம்பித்தது. இப்படியே சிறுகச் சிறுகச் சேர்ந்த குப்பை ஒருகட்டத்தில் வீடே குப்பை மேடாக மாறியது.

பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமைட்டோ.. தினமும் ரூ.1.5 கோடி கூடுதல் வருமானம்?

இதனால் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அருகிலிருந்த ஒரு சமூக ஆர்வலர் வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக வெளியே செல்லாமல் வீட்டினுள் முடங்கி கிடந்து மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் அந்த குப்பைகள் மத்தியில் வாழ்ந்துள்ளனர். உடனடியாக அவர் மாநகராட்சிக்குக் தகவல் கொடுக்க அவர்கள் வந்து வீட்டை சுத்தம் செய்தனர்.

அவர்கள் வீட்டில் சுமார் 2 டன் குப்பைகள் இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் ஷாக் ஆகினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டை சுத்தம் செய்து தாய் மகள் இருவரும் மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆலோசனை தரவும் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.