தளபதி விஜய்யோட பாட்டுல இப்படி ஓர் விஷயம் இருக்கா? 75 வருஷ தமிழ்சினிமாவில் இப்படி ஓர் பாட்டு வந்தது இல்ல..

Published:

தமிழ்சினிமாவில் பேசும் படம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று சினிமா பல வகைகளில் மக்களிடம் எளிதில் கருத்துக்களைக் கொண்டு போய் சேர்க்கும் முதன்மை ஊடகமாகத்திகழ்கிறது. ஒரு புத்தகம் முழுக்க படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதை ஒரு சினிமா நமக்கு இயல்பாக உணர்த்தி விடும். இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து பல யுக்திகளைக் கையாண்ட திறம்பட திரைப்படங்களை உருவாக்குகின்றனர். அதில் பாடல்களுக்கு தனி இடமே உண்டு.

அந்த வரிசையில் தியாகராஜ பாகவதர் முதல் மருதகாசி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய், தாமரை, நா.முத்துக்குமார், புலமைபித்தன்,பிறைசூடன் என பல பாடலாசிரியர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே சிறந்த பாடலாசிரியர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் இவர்கள் அனைவரும் செய்யாத ஒருபுதுமையை தனது பாட்டில் புகுத்தியுள்ளார் ஒரு கவிஞர். அவர் கபிலன். தளபதி விஜய்க்கு பெரும்பாலான ஹிட் பாடல்களை எழுதியவர். மேலும் விக்ரம், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கும் நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

ரஜினியின் ஆஸ்தான வில்லனான ரகுவரன்.. ஐடியா கொடுத்த ஏ.வி.எம். சரவணன்.. எந்தப் படத்துல தெரியுமா?

இப்படி இவர் எழுத்தில் உருவான ஒரு பாடல் தான்
கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…
குழலில்ல குழலில்ல தாஜ்மகால் நிழலு

என்று ஆரம்பிக்கும் பாடல். வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் இசைக்கு கபிலன் இந்த வரிகளை எழுதியிருப்பார். சாதாரணமாக இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு டூயட் பாடல் என்று தான் தோன்றும். அங்குதான் விஷயமே இருக்கிறது. 75 வருட சினிமா வரலாற்றில் ஒரே பாடலில் அடுத்தடுத்த வரிகளில் இரண்டு உவமைகளும், அதனைத் தொடர்நது உருவகமும் ஒருசேர இணைந்து பாடல் உருவாகியிருக்கிறது.

நாம் நன்றாக இந்தப் பாடலைக் கவனித்தோம் என்றால் பாடல் முழுக்க வரும் வரிகள் அனைத்தும் இதே நடையில் எழுதப்பட்டிருக்கும். இதே பார்முலாவில் வேறு எந்தப் பாடலும் இதுவரை பிறந்ததில்லை. இப்பாடலைக் கேட்டு கவிஞர் வாலி கபிலனை அழைத்து உச்சி நுகர்ந்து பாராட்டினாராம். 75 வருட சினிமா வரலாற்றில் இப்படி ஒரு பாடலை யாரும் எழுதியது கிடையாது என்று பெருமையாகக் கூறி பாராட்டினாராம் வாலிபக் கவிஞர்.

மேலும் உங்களுக்காக...